Home சூடான செய்திகள் பெண்கள், உள்ளாடை வாங்கும் போது…

பெண்கள், உள்ளாடை வாங்கும் போது…

56

பெண்கள் மேலாடைகளை தேர்ந்தெடுத்து அணிவதில், எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனரோ, அதை விட அதிக ஆர்வத்தை, உள்ளா டைகளில் குறிப்பாக, “பிரா’ வாங்கி அணிவதிலும் காட்ட வேண்டும். இக் காலத்தில், பிராக்களில் எவ்வளவு வடிவங்கள், சவுகரியங்கள் வந்துவி ட்டன. புஷ் அப் பிரா, லேஸ் பிரா, ஒயர் இணைப்பு பிரா, நர்சிங் பிரா, எம்பிராய்டரி பிரா, இப்படி பல வகை கள் உள்ளன.
முன்பெல்லாம் கறுப்பு, வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் பிரா இரு ந்தது. இப்போது பல வண்ணங்கள். சருமத்தின் நிறத்தை ஒத்துப் போகும் பிராக்களும் கிடைக்கின்றன. அதோடு, கால நிலைக்கு ஏற்றவைக ளும் உண்டு. பெண்கள், அதிகமாக விரும்புவதும், விரும்ப வேண்டி யதும், காட்டன் பிராக்களே. இதில், ரவு ண்ட் ஸ்டிக் பேட்டர்ன் பிரா, பலருக்கும் பிடிக்கும். மார்புக்கு பொருத்தமாக அமைவது இதன் விசேஷம். இதில், லேஸ் உள்ளவைகளும் உண்டு. ஒயர் இணைப்பு கொண்ட பிராக்கள், மார்புக் கு அழகையும். நிலையான தன்மையும் தரும்.
வெளிநாட்டு பிராக்களுக்கு, இப்போது இந்தியாவில் ரொம்பவே மவுசு. பளிச் சென்று இருக்கும். இந்த பிராக்களில், செயற்கை ரத்தினக் கற்களையும் இணைத்து கொள்கின்றனர். பட்டில் எம் பிராய்டரி செய்த பிராக்களும் உண்டு. அணிந்து பார்த்து பொருத்த மாக இருக்கும் பட்சத்தில் பிரா வாங்குவது நல்லது. பிராக்களின் கப், மார்பை இறுக்கிப் பிடிக்கும் விதத்திலோ அல்லது தளதளப்பா கவோ இருக்கக் கூடாது. “அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளு ம் விதத்தில், ஸ்டிராப்களை கொண்ட் பிராக்கள் நல்லது. கர்ப்ப காலத்தில், உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு தக் கபடியான பிரா அணிய வே ண்டும். நம் நாட்டு சீதோஷ் ண நிலைக்கு, காட்டன் பிரா க்களே சிறந் தது.
உங்களுடைய பிரா அளவென்ன என்பதை, உங்களாலேயே தீர்மானி க்க முடியும். மார்புகளின் சற்று கீழ் இருக்கும் எலும்பின் மேலாக, டேப்பை வைத்து அளந்தால், அந்த அளவே, உங்களுக்குத் தேவை யான பிராவின் அளவு. அடுத்து, மார்பின் மேல் பகுதியில் வை த்து அளந்து பாருங்கள். முதல் அளவும், இந்த அளவும் ஒரே மாதிரி இருந் தால், உங்களுக்கு தேவையான கப் சைஸ் ஏ ஆகு ம். இரண்டாவது அளவு, முதல் அளவை விட ஒரு இஞ்ச் அதிக மாக இருந்தால் கப் சைஸ் பி.
பிராவின் அளவிலோ, கப் சைசி லோ சந்தேகம் வந்தால், பிராவை அணிந்து பார்த்து வாங்க வேண் டும். பிராவின் கப் சைஸ், மார்பை முழுமையாக உள்வாங்கிக் கொ ள்ள வேண்டும். நாடா உடலை இறுக்கக் கூடாது.
பெண்கள், கர்ப்ப காலத்தில், அதற்குரிய வகையில் பொரு த்தமான பிராவை வாங்கி அணிய வேண்டும். சரியான பிரா அணியா விட் டால், மார் புகள் சரியும் நிலை ஏற்படும். அதுபோல, தாய்ப்பால் ஊட் டும் காலத்திற்கு ஏற்ற பிரா வும் உள்ளது. அதை அவசியம் அணிய வேண்டும். குளித்தவு டன் பிரா அணியக் கூடாது. மார்பை நன்றாக துடைத்து, தண்ணீர் தன்மை இல்லாத நிலையில், பிராவை அணி வதே ஆரோக்கியமா னது.