குழந்தை பெறாமலே மார்பகங்களில் பால் வருகிறது?-காம கேள்வி பதில்
டாக்டர், எனக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது, என் மார்புகள் கொஞ்சம் நன்றாக வளர்ந்து இருக்கும் (சைஸ் முப்பத்து நான்கு) . நான் என் காதலனுடன் உடலுறவு கொள்கிறேன் ஆனால் கர்ப்பமாகவில்லை. அதே போல எனக்கு குழந்தை பிறக்கவுமில்லை. ஆனால் என் காதலன் என் மார்பகத்தை உறிஞ்சும்போது எனக்கு பால் கசிகிறது! இது என்ன பிரச்னை? இது ஏதாவது மார்பகப் புற்று நோயின் அறிகிரியா? பிளீஸ் விளக்குங்கள்!
ரம்யா, சென்னை
மருத்துவர் பதில்:
உங்களுக்கு வந்திருக்கும் நிலைக்கு ஆங்கிலத்தில் ( Galactorrhea ) என்று சொல்கிறார்கள். உங்களுக்கு வலியோ, மிகக் குறைந்த அளவில் பாலோ, அல்லது நீரோ கசிந்தால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இருந்தாலும் நீங்கள் மருத்துவரிடம் காட்டி விடுவது நல்லது.
பால் சுரக்கும் செல்கள் பிட்யூட்டரி சுரப்பியில் (pituitary gland )உள்ளன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த சுரப்பிக்கும் ஹைபோதலாமஸ் (hypothalamus) என்ற பகுதிக்கும் தொடர்பு பாதிக்கப் படுவதால் ஏற்படும் நிகழ்வே இது.
இதற்கு பல காரணங்கள் உண்டு:
. பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி ( tumor) இருத்தல்.
. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மாற்றங்கள்
. மற்ற மருந்துகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொண்டாலும் இது போல பால் கசிய வாய்ப்பு உள்ளது.
இப்போது நான் கீழே சொல்லும்படியாக உங்கள் நிலை இருந்தால், இது ஒரு சாதாரணமான நிகழ்வே:
சிறு வயது (இருபதுக்கு கீழே)
குறைந்து அளவு பால் கசிதல்
இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருத்தல்
வேறு மார்பகப் பிரச்சனை இல்லாது இருத்தல்
மருந்து மாத்திரை உட்கொள்ளாது இருத்தல்
மார்புகளில் வலி இல்லாது இருத்தல்
மேலே கூறியவை உங்களுக்கு பொருந்தினால் உங்களுக்கு தொண்ணூறு சதவிகிதம் உடம்பில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தான் மருத்துவ ரீதியான கணிப்பு.
உங்களை எயிட்ஸ் தாக்கி இருக்குமா?-மருத்துவ ஆலோசனை
எய்ட்ஸ் நோயின் ஆரம்ப அறிகுறி பற்றி தெரிந்து கொள்வது அவசியம். கீழே உள்ளதை படித்துப் பார்த்து உங்களுக்கு அவை பொருந்துமா என்று பாருங்கள்!
உங்கள் எடை குறைந்து உள்ளதா?
அடிக்கடி சளி, காய்ச்சல் வருகிறதா?
மிகவும் அசதியாக உள்ளதா?
அடிக்கடி மலம், சிறுநீர் கழிக்கிறீர்களா?
ஞாபக சக்தி குறைவாக உள்ளதா?
கண் பார்வை மங்குதல், கண் எரிச்சல் இருக்கிறதா?
கன்னம் ஒட்டி காணப்படுகிறதா?
உங்களுக்கு எயிட்ஸ் அல்லது எச் ஐ வி கிருமி தாக்க வாய்ப்பு இருக்கலாம்!!
யாரோடாவது பாதுகாப்பற்ற உடலுறவு வைத்து உள்ளீர்களா?
ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட ஊசி, ஷேவிங் ரேசர், போன்றவற்றை உபயோகித்து உள்ளீர்களா?
வேறு தவறான பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையா?
உங்களுக்கு எச். ஐ வி நோய் இருக்க வாய்ப்பு உண்டு!