Home ஆரோக்கியம் ஸ்மார்ட் போனை பிரா மற்றும் பேண்ட் பாக்கெட்டில் வைக்கலாமா?

ஸ்மார்ட் போனை பிரா மற்றும் பேண்ட் பாக்கெட்டில் வைக்கலாமா?

26

Captureஸ்மார்ட் போன் இல்லாத ஓர் நாளை நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. ஆனால் இந்த ஸ்மார்ட் போன் நமது ஆரோக்கியத்தில், உறவில், அன்றாட வேலைபாடுகளில் என பலவற்றில் தீயத் தாக்கங்களை உண்டாக்குகின்றன. முக்கியமாக ஸ்மார்ட் போனை பெண்கள் பிராக்களிலும், ஆண்கள் பேண்ட் பாக்கெட்டுகளிலும் வைக்க வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்மார்ட் போன்களை பிராக்களில் வைத்து பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாகிறது என ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது.

ஆண்கள் பேண்ட் பாக்கெட்டில் மொபைல் போனை அதிகம் வைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது. இதனால், நாள்பட ஆண்மை குறைபாடு உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன.

இதய பாதிப்பு உண்டாகி ஃபேஸ்மேக்கர் வைத்திருக்கும் பெண்கள் தவறுதலாக கூட ஸ்மார்ட் போனை பிராவில் வைக்கக் கூடாது. சிக்னல் தாக்கத்தால் ஃபேஸ்மேக்கர் செயல் தடைப்பட்டு போய்விடும்.

கால்கள், புட்டம், முதுகு வலி போன்றவை உண்டாகவும் இது ஓர் காரணமாக இருக்கிறது. ஆம், மொபைலை பேண்ட்டின் முன் பாக்கெட் அல்லது பின் பாக்கெட்டில் அதிகம் வைப்பதால் தசை நார்களில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது.

ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மூளையின் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும். இதனால், மனநிலை மாற்றங்கள் உண்டாகலாம்.

ஓர் ஆய்வில், ஸ்மார்ட் போன்களை அருகேயே வைத்து வேலை மற்றும் உறங்கும் நபர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக உண்டாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. உண்மையில், வேலையில் கவனத்தை செலுத்தவிடாமல் அடிக்கடி மொபைலை எடுத்துப் பார்க்க செய்யும் செய்கையால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது.

அடிக்கடி அதிகமாக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், உறக்கநிலையில் சீர்கேடு உண்டாகிறது. இதனால், இரவு நேரத்திலாவது ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

இது மிக அரிதாக நிகழும் விஷயம் எனிலும், நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆம், தொடர்ந்து சிக்னல் மற்றும் டேட்டாக்களை ரிசீவ் செய்துக் கொண்டே இருப்பதால், வெடிக்கும் அபாயம் இருக்கிறது. அதே போல இதனால் மொபைல் அதிக சூடாகும். இது உடலுக்கு