சூடான செய்திகள்:நீண்ட கால உறவுக்கு தாடியுள்ள ஆண்களையே அதிக பெண்கள் விரும்புவதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாடியுள்ள ஆண்கள் ஈர்க்கும் வகையில் இருந்தாலும், நீண்ட கால உறவுக்கு எவ்வித அச்சமுமின்றி ஒரு விஷயத்தை நேரடியாக கையாளும் தன்மை அவர்களிடம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பெண்கள் தாடியுள்ள ஆண்களை கவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
கவர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவில், தாடியுள்ள ஆண்களுக்கும் அவர்களது ஆண்மைக்கும் இடையே முக்கியமான தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் இருந்து பார்நேபி டிக்ஸன் என்பவர் தலைமயிலான குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது.
இந்த ஆய்வில், கம்பியூட்டர் கிராபிக்ஸ் மூலம் ஆண்களின் முகத்தில் மார்பிங் செய்து பல்வேறு வகையில் முகத்தில் முடி வைத்து வடிவமைத்தனர். கிளீன் ஷேவ், குறுந்தாடி, அடர்ந்த தாடி, தாடையில் முடி, காதோரம் உள்ளிட்ட இடங்களில் முடி வைத்து பல பெண்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர்.
அதனடிப்படையில் முகத்தில் தாடி வைத்திருந்த ஆண்கள் மிகவும் ஈர்ப்புள்ளவர்கள் என்றும், நீண்ட கால உறவுக்கு சிறந்தவர்கள் என்றும் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காதல் உறவோ, பாலியல் உறவோ, பெண்களின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வகிப்பதாகவும், அவர்களது தேர்வு சில கோட்பாடுகளை கொண்டிருக்கும் என்பதால் அவர்களது தேர்வில் உண்மை தன்மை இருக்கும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.