Home பெண்கள் பெண்களின் உடலோடு ஒட்டிக்கிடக்கும் பிராக்கள்

பெண்களின் உடலோடு ஒட்டிக்கிடக்கும் பிராக்கள்

94

பெண்களின் உடலோடு ஒட்டிக்கிடக்கும் பிராக்கள், அவர்களின் முன் அழகை பல மடங்கு அதிகரிக்கிறது. காலத்திற்கு ஏற்ப, வடிவத்திலும், நிறத்திலும், தோற்றத்திலும், சவுகரியங்களிலும் அது நல்ல மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
முன் அழகு முழு அழகாகத் திகழவேண்டும் என்றால், சரியான அளவிலான பிராவை தேர்ந்தெடுத்து அணியவேண்டும். அதிக அழகுக்கு இறுக்கமான பிராவை அணிய வேண்டும் என சில பெண்கள் கருதுவதுண்டு. அது சரியல்ல, பிரா அதிக இறுக்கத்துடன் இருந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கும். அந்தப் பகுதி வீக்கமடையும். அதிகமாக வியர்க்கும். அதனால் சரும நோய்கள் உருவாகக்கூடும்.
இறுக்கமான பிரா அணிந்தால் இத்தனை பிரச்சினைகள் இருப்பதால், தொள தொளவென பிரா அணிபவர்கள் உண்டு. அது வேறு விதத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். தொளதொள பிரா அணிந்தால், அது மார்பகங்கள் தொங்கிப்போக காரணமாகிவிடுகின்றன. அது அழகுக் குறைபாடு ஆகிவிடும்.
உங்களுக்கு எந்த மாதிரியான பிரா பொருத்தமாக இருக்கும் என்பதை அளவு மூலம்தான் தீர்மானிக்க முடியும். சரியாக எப்படி அளவிட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
***
கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு அளவெடுக்கும் வேலையை தொடங்கவேண்டும். மார்பின் சற்று கீழே நெஞ்சில் டேப்பை வைத்து அளவிட வேண்டும். டேப்பை இறுக்கமாகவோ, தளர்வாகவோ பிடிக்கக்கூடாது. சரியான முறையில் பிடித்து அளவெடுத்தால் மட்டுமே சரியான அளவை தெரிந்துகொள்ள முடியும்.
டேப் மூலம் கணிக்கப்படும் உங்கள் அளவு என்னவோ, அத்தோடு ஐந்தை சேர்த்தால் கிடைக்கும் அளவே, உங்கள் பிராவின் அளவு. அளவிடும்போது ஒற்றைப்படை எண் வந்தால், கூடுதலாக ஒன்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது பிராவின் `பேண்ட் சைஸ்’ எனப்படும் சுற்றுவட்ட அளவுதான்.
அடுத்து பிராவின் `கப் சைஸ்’ அளவெடுக்க வேண்டும்.
முதலில் கண்ணாடியை பார்த்தபடி நிமிர்ந்து நில்லுங்கள். டேப்பால் மார்பகங்களின் மேற்பகுதி யோடு அளவிட வேண்டும். அளவிடும்போது டேப் மார்பகங்களை தொட்டபடி இருக்க வேண்டும்.
முதலில் இந்த கப் சைஸ் எடுத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்து பேண்ட் சைஸ் அளவை குறைக்கவேண்டும். அப்போது கிடைக்கும் நம்பர் ஒன்றாக இருந்தால், உங்கள் கப் சைஸ் `ஏ’ என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஏ, பி. சி என்று கப் சைஸில் மூன்று வகை உள்ளன.
பேண்ட் சைஸ், கப் சைஸ் இரண்டையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு பிராவின் அளவை கண்டறியலாம். முதல் இரு அளவீடுகளையும் பிரா வாங்கும் கடையில் கொடுத்தால் அவர்கள் உங்கள் பிராவின் அளவைக் கூறுவார்கள்.
***
பிராக்களில் பத்து வகைகள் உள்ளன. அதன் விவரம்:

ஸ்போர்ட்ஸ் பிரா

விளையாட்டு வீராங்கனைகள் இதை அணிவார்கள். மார்பகங்கள் வளர்ச்சியடையத் தொடங்கும் காலத்தில் சிறுமிகளுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.
தாய்மை பிரா

பாலூட்டும் தாய்மார் கள் அணிய வேண்டிய பிரா இது. இதனை `நர்சிங் பிரா’ என்பார்கள். குழந்தைக்கு பாலூட்டு வதற்கு எளிதாக திறந்து, மூடும் விதத்தில் இது வடிவமைக் கப்பட்டிருக்கிறது. கெட்டியான துணியில் `லைனிங்’ செய்யப்பட்டிருப்பதால் நனைந்தாலும் பிரச்சினையிருக்காது.
தேனிலவு பிரா
`ஹனிமூன் பிரா’ என்று கவர்ச்சியாக பெயர் சூட்டப்பட்டிருக்கும் இதனை, புதுமணப் பெண்கள் வாங்கி பயன்படுத்துவார்கள். பளிச்சென்ற வண்ணத்தில் பார்க்க அழகாக இருக்கும். எம்பிராய்டரிங் ஒர்க் செய்யப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம்.
கிராஸ் கட் பிரா

குண்டான தோற்றம் கொண்ட பெண்கள் இதனை அணியவேண்டும். பெரிய மார்பகங்களாக இருந்தாலும் நன்றாக தாங்கிப் பிடித்துக்கொள்ளும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ரவுண்ட் ஸ்டிச் பிரா
மார்பகங்கள் தூக்கலான அழகுடன் காட்சியளிக்க வேண்டும் என்று விரும்பும் பெண்கள் இதனை வாங்கி பயன்படுத்துவார்கள்.
மெட்டல் பிரா
ஜீன்ஸ் போட்டுக்கொள்ளும் பெண்கள் இதனை அணிவார் கள். இதில் `மெட்டல் சப்போர்ட்’ இருப்பதால் மார்பகங்கள் தொங்காத அளவிற்கு பிடித்துக்கொள்ளும்.
பேடட் பிரா
மார்பகங்களை உடலுக்கு பொருத்தமாக சற்று பெரிதாகக்காட்டவும், மார்பகத்திற்கு நல்ல வடிவத்தை தரவும் இது உதவும்.
லேஸ் பிரா

இந்த பிராக்களில் லேஸ் இணைக்கப்பட்டிருக்கும். புடவை கட்டும் பெண்கள் அணிந்துகொள்ள சிறந்தது.
ஸ்ட்ராப்லெஸ் பிரா
இந்த வகை பிராக்களில் `ஸ்ட்ராப்’ இருக்காது. கவுன் அணியும்போது இதனை பயன்படுத்திக்கொண்டால் அழகு அதிகரிக்கும்.
சிலிக்கான் பேடு பிரா
மார்புகள் சிறிதாக தோன்றுகிறதே என்று வருந்தும் பெண்கள் இதனை பயன்படுத்தி சந்தோஷமடைந்துகொள்ளலாம். பிராக்களில் `சிலிக்கான் பேடு’ இணைத்து வைத்திருப்பார்கள். பேடு தேவைப்படாவிட்டால் கழற்றி எடுத்துவிடலாம். தேவைப்பட்டால் அதற்கென்று இருக்கும் விசேஷ பசையை பயன்படுத்தி பேடை ஒட்டி அணிந்து கொள்ளலாம்.

என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்…

டி-சர்ட் பிரா

இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? – இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.

டீன்-ஏஜ் பிரா

டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.

புல் போர்ட் பிரா

வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

நாவல்டி பிரா

திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா

விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.

மெட்டர்னிட்டி பிரா

கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.

நர்சிங் பிரா

கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.

கன்வர்டபுள் பிரா

பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.

இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.

அடுத்ததாக, சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாகக் காட்ட, தளர்ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவும் பிராக்கள்…

மினி மைஸர்

இவ்ளோ பெரியதாக இருக்கே… என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவுதான்.

பேடட் பிரா

அடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்… என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க வைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.

புஷ் அப் பிரா

சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.

அண்டர் ஒயர் பிரா

இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.

கியூட் வெட்டிங் பிரா

மேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.

மெசக்டமி பிரா

கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.

இனி, பிரா தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான பதில்களும்…
கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பதில்: உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ராப் பதிந்த இடங்கள் சிவந்து போய் காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ராப் ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பது போல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.

கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?

பதில்: தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

கேள்வி: கொழுக்மொழுக் என்று உள்ள பெண்கள் (36 சைஸ் உள்ளவர்கள்) எலாஸ்டி’ ஸ்ட்ராப் வைத்த பிரா அணியலாமா?

பதில்: நிச்சயம் அணியக் கூடாது. உங்களது மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழி வகுக்கும்.

கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?

பதில்: கண்டிப்பாக. தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிரா சைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.

கேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?

பதில்: இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணிந்து என்ஜாய் பண்ணலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை பலர் பிராக்களை அணிந்து அழக பார்க்கலாம்.

கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?

பதில்: பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதை விட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை.