Home சூடான செய்திகள் பிரா குறித்து தெரிந்ததும்,தெரியாததும்..!

பிரா குறித்து தெரிந்ததும்,தெரியாததும்..!

31

30-1467281033-1-xwrongbrasigns6பெண்கள் அணியும் பிரா குறித்து நாம் அறிந்தவை,அறியாதவை குறித்து இங்கு பார்க்கலாம்.

உங்கள் மார்பகங்களின் கீழ் சிவப்பான கோடுகள் போல் தோன்றினால் நீங்கள் மிகவும் டைட்டான பிராவை அணிகிறீர்கள் என அர்த்தம்.எனவே இதை தவிர்க்க சற்று பெரிய பிராவை வாங்கி அணியுங்கள்.

பெரிய மார்பகங்களை கொண்டவர்கள் இரவில் பிரா அணிந்து தூங்குவதில் தவறில்லை.ஏனெனில் இது உங்கள் மார்பகங்கள் தளர்ந்து போகாமல் இருக்க உதவும்.

சிறிய மார்பகங்கள் கொண்டுள்ளவர்கள் பிரா அணிந்து கொண்டும் உறங்கலாம்.அணியாமலும் உறங்கலாம்.இதனால் அவர்களின் மார்பகத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.

பிராக்களை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.இல்லாவிட்டால் மார்பகப் பகுதியில் தோல் பிரச்சனைகள் ஏற்படலாம்.

உங்கள் மார்பகம் எடுப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக மிகவும் டைட்டான பிராக்களை உபயோகிக்காதீர்கள்.இவை உங்களுக்கு மூச்சு விடுவதில் கூட சிரமங்களை ஏற்படுத்தலாம்.

மிகவும் டைட்டான பிராக்களை அணிபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.எனவே சரியான அளவுகளில் பிராக்களை வாங்கி அணியுங்கள்.

பிராக்களின் அளவு குறித்த சந்தேகம் உள்ளவர்கள் நெகிழ்வுத் தன்மையுள்ள எலாஸ்டிக் பிராக்களை வாங்கி அணியலாம்.இவை உங்கள் மார்பகத்தின் அளவிற்கு ஏற்றவாறு அளவை மாற்றிக் கொள்ளும்.

மிகவும் டைட்டான பிராக்கள் அணியும் போது உங்கள் மார்பகப் பகுதியில் வியர்வை காரணமாக தோல் அழற்சி ஏற்படலாம்.எனவே வேர்வையை உறியும் வகையிலான பிராக்களை வாங்கி அணியுங்கள்.

பிரா அணியாததால் மார்பகத்திற்கு எந்த தீங்கும் விளையாது.நீங்கள் தளர்வான ஆடைகளை அணியும் பழக்கம் உள்ளவர் என்றால்,பிரா அணிந்து கொள்வது உங்கள் மார்பகங்களை தளர்வாக்காமல் இருக்கும்.

35 வயதைக் கடந்த ஒவ்வொரு பெண்களும் மார்பகப் புற்றுநோய் குறித்த சோதனையை செய்வது அவசியம்.

அவ்வவ்போது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனித்துக் கொண்டே இருங்கள்.சிறிய கட்டிகள்,பருக்கள் இருந்தாலும் மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.

வாரத்தில் ஒருமுறை கண்ணாடிக்கு முன் நின்று உங்கள் மார்பகங்களை நன்கு அழுத்தி சோதித்து பாருங்கள்.வலியில்லா கட்டிகள் இருப்பது மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

மருத்துவர்களிடம் உங்கள் மார்பகங்களை காட்ட கூச்சப்படாதீர்கள்.உலகில் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்குத் தான் முதலிடம்.