நான் ஒரு ஏழை குடும்பத்துப் பெண்; வயது 32. திருமணமாகி, 12 ஆண்டுகள் ஆகின்றன; இரண்டு குழந்தைகள் உள்ளன. உடன் பிறந் தோர் எல்லாரும் நல்ல வேலையில் உள்ளனர். என் கணவர் கூலி வே லை பார்க்கிறார். நான் வீட்டில் இருந்தபடியே கைத் தொழில் செய்கி றேன். வாழ்க்கை, பத்து வருடங்களாக நல்லபடி யாக, எவ்வித பிரச்னை யும் இல்லாமல் போய் கொண்டிருந்தது.
நான் வேலை செய்யும் கம்பெனியில், செய்த வேலைக்கு, பணத் தை செக் ஆக கொடுத் தனர். அதை மாற்றுவதற்கு, ஒரு வங்கியில், கணக்கு ஆரம்பித் தேன்; அதனால், அடிக்கடி வங்கிக்கு போக வே ண்டி வந்தது. என் கணவரிடம் செக்கை கொடுத்து போடச் சொல் வேன்; அவரும்போட்டு, “ஏ.டி.எம்.,மில்’ பணத்தை எடுத்து வரு வார். ஒரு தடவை என் கணவர் வெளியூர் சென்றிருந்ததால், தெரி ந்தவரிடம் செக்கை கொடுத்து, என் கணக்கில் போடச் சொன் னேன்; அவர், வேறொரு கணக்கில், செக்கை போட்டு விட்டார். பத்து நாட்கள் கழித்து, பணம் எடுக்கப் போனேன். பணம் என் கணக் கில் பற்று ஆகவில்லை. பணம் போட்ட, “ஸ்லிப்’பை காட்டி, சரி பார்க்கச் சொன்னேன். வங்கி, என்னை ஒரு வாரம் அலைக்கழித்தது.
நகைக் கடன்களை கவனிக்கும் வங்கி அதிகாரி என்னை அழைத்து, விவரங்களை தெரிந்து, என் பணம் கிடைக்க வழி செய்தார். அத்துடன், “பொது தொலைபேசியில் ஒரு ரூபாய் நாணயம் போட்டு ஏன் பேசுகிறீர்கள்?’ என அனுதாபப்பட்டு, நான் மறுக்க, மறுக்க ஒரு மொபைல் போனும் வாங்கிக் கொடுத்தார். எந்த ஆணுடனும் பேசாத நான், இவரிடம் மட்டும் பேசினேன். வங்கி வேலைகளை எனக்காக அந்த பாங்க் சார் சிரத்தை எடுத்து முடித்துக் கொடுக்க, எங்களுக்குள் தொலைபேசி பேச்சு அதிகமானது; நட்பாக பழகி னோம். “உங்களின் அமைதியான குணம் எனக்கு பிடித்திருக் கிறது…’ என்றார்; என் போனுக்கு அவரே, “ரீ-சார்ஜ்’ செய்தார். ஒரு கட்டத்தில் இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டோம். தொடர்ந்து, ஒரு வருடம் தாலி கட்டாத கணவன் – மனைவியாக வாழ்ந்தோம். பிற ஆண்களை ஏறெடுத்து பார்க்காத நான், இரு குழந்தைகளும் பெற்ற பிறகு, ஒழுக்கம் தவறி விட்டேனே என்று அழுதேன்.
போன் கிறுக்கு எனக்கு வந்து விட்டது. வாரம் ஒரு முறை போன் செய்த நான், ஒரு நாளைக்கு, ஆறு தடவை, “மிஸ்டுகால்’ கொடு த்து, அவரிடம் பேச ஆரம்பித்தேன். ஒரு வாரம் சொந்த ஊருக்கு அவர் போன போது, “நீ கால் பண்ணாதே… நேரம் கிடைக்கும் போது நான் கால் பண்றேன்…’ என்றார். அவர் குரல் கேட்க ஏங்கிப் போ னேன்.
ஒருநாள், நான்கு மாதம் லீவு போட்டு, ஊருக்கு போகப் போவதாக கூறினார். “உங்களை பார்க்காமல் எப்படி இருப்பேன்…’ என அழு தேன். எங்களின் ஒரு வருட உறவில், ஒருநாள் கூட அவரிடம் ஒரு பைசா வாங்கினதில்லை. “என் மனைவியை விட, உன் மீது அதிகம் பாசம் வைத்திருக்கிறேன்; மறுக்காதே. உனக்கு ஒரு வீடு கட்டித் தருகிறேன்…’ என்றார். ஊருக்கு போனவர், போன் பண்ணவில்லை; “லீவு முடிந்து ஏன் அவர் வங்கி பணிக்கு வரவில்லை…’ என வினவினேன். அவர் விருப்ப ஓய்வு பெற்று, சொந்த ஊருக்கு போய் விட்டார் என்றனர். அவருக்கு போன் செய்தால், போனை, “கட்’ பண்ண ஆரம்பித்தார். அபூர்வமாக ஒரு நாள் போன் எடுத்து, “உன் னால் என் மனைவியிடம் எக்கச்சக்க பாடுகள் பட்டுவிட்டேன். நீ என் மீது உண்மையான பாசம் வைத்து விட்டாய்; ஆகையால் சிரமப்படுகிறாய். முழு முயற்சி எடுத்து என்னை மறந்து விடு…’ என்றார்.
அம்மா… அவரிடம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டும்…
ஒன்று – என்னிடம் எவ்வளவு பணத்தை, நகையை, சொத்தை அவர் இழந்தார்?
இரண்டு – நான் அப்படி எத்தனை நாள் அவர் வீட்டிற்கு போன் செய்து மனைவியிடம் மாட்டி விட்டேன்?
எனக்கு வீடு கட்டித் தருகிறேன், உன்னிரு பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்றாரே… நான் ஒத்துக் கொண்டேனா?
ஏமாந்து விட்டோமே என்ற கவலை என்னை தினமும் கொல்கிறது. வெளியூரில் பணிபுரியும் கணவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய் து விட்டேன். தற்கொலை எண்ணத்தை குழந்தைகளுக்காக கை விட்டேன். கணவரி டம் இருக்கும் போது, குற்ற உணர்ச்சி ஆட்டிப் படைக்கிறது. இப்போதெல்லாம் வங்கிக்கு பணம் எடுக்க நான் செல்வதில்லை. முப்பது வருடம் கட்டிக் காத்த கவுரவத்தை, இரண்டு வருடங்களில் சீர்குலைத்து விட்டேன். நான் அவரிடம் உடம்பால் கெடவில்லை; உள்ளத்தால் கெட்டு விட்டேன். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டு மென்று இறைவனை வேண்டுகிறேன்.
அம்மா… பாங்க் சாரின் ஊர் மட்டும் எனக்கு தெரியும். அவரின் குடும்ப போட்டோ என்னிடம் உள்ளது. அவரை நேரில் சென்று பார்க்கலாமா அவரது போனையும், பரிசு களையும் அவரிடம் திருப்பிக் கொடுக்க போகிறேன்.
எனக்கு நல்லதொரு வழியைச் சொல்லுங் கம்மா.
—இப்படிக்கு, அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு —
இரண்டு குழந்தைகளுக்கு தாயான உனக்கும், தவறான கணக்கில் போடப்பட்ட செக் பணத்தை, திரும்ப கிடைக்க உதவிய வங்கி அதிகாரிக்கும் திருமண பந்தம் மீறிய உறவு பூத்திருக்கிறது. இரண்டு வருட உறவு கசந்து, “பாங்க் சார்’ உன்னை கை கழுவி விட் டார். அவரின் சொந்த ஊருக்கு சென்று, சில கேள்விகள் கேட்க விரு ம்புகிறாய்.
உன் கடிதத்தை படித்தால், உன் மீது கோபம் வரவில்லை; பரிதாபம் தான் வருகிறது. உனக்கு அம்மா இல்லை, அப்பா இல்லை, உடன் பிறந்தோர் உன்னை விட்டு வெகுதூரம் விலகி வாழ்கின்றனர். பாங் க் சாருக்கு வயது, 52க்கு மேல்தான் இருக்கும். தந்தையை போல் தோற்றமளிக்கும் ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு, “எலக்ட்ரா காம்ப்ளக்ஸ்’ எனப்படும் மனநோய் இரு க்கிறது என்று அர்த்தம்; அந்த நோய்தான் உனக்கும்.
உனக்கு வயது 32. முப்பது வருடங்களாக எவ்வித செக்ஸ் தப்பும் செய்யவில்லை, செய்ய வில்லை என கர்வப்பட்டு, பாவ குளத்தில் விரும்பிக் குதித்திருக்கிறாய் மகளே…
பாங்க் சார் உன்னை ஒரு சில தடவை அனுபவித்து, உதறிவிடத் தான் பார்த்தார்; நீதான் அவரை உடும்பு போல் பிடித்துத் தொங் குகிறாய். தவறான உறவு வைத்திருக்கும் பெண்களிடம், ஆண்கள், “என் மனைவியை விட, உன் மீதுதான் பாசம் வைத்திருக்கிறேன்…’ என்று சொல்வது சகஜம். காம உளறல்களை வேத வரிகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
உன்னுடன் பழகியதற்கு பணம் கொடுக்க பாங்க் சார் தயார்; நீ மறுத்து விட்டாய். வீடு கட்டித் தருவதாக கூறியிருக்கிறார். அந்த கூற்று உண்மையோ, பொய்யோ… பணத்தை கொடுத்து உன் உறவு கணக்கை சரி செய்து விடலாம் என, பாங்க் சார் நினைத்தார்; நீ உடன்படவில்லை.
உனக்கு உலக அறிவு போதாது செல்லம்.
உனக்கென்று ஒரு கணவனும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர்; பாங்க் சாருக்கு என்று மனைவியும், குழந்தைகளும் இருக்கின்ற னர். அவர், தன் குடும்பத்தை பார்க்க போய் விட்டார். நீ கள்ளக் காதலர் விட்டுப் போய் விட்டாரே என புலம்புகிறாய். நீ, சரியான சுயநலவாதி தானே… பாங்க் சாரிடம் உனக்கு கிடைத்தது உடல் சுகம். அந்த உடல் சுகம், திருப்தியாக இருந்ததால், அவரிடம் நீ பணம் எதிர்பார்க்கவில்லை. அந்த உடல் சுகத்துக்காக, உன் குழந்தைகளின் எதிர்காலத்தை காலடி யிலிட்டு நசுக்குகிறாய்; நியாயம்தானா?
உறவை துண்டித்து, அவர் ஓடி விட்டார்; நீயோ விடாமல் அவரை துரத்திப் போகிறாய். கள்ள உறவு, கொலைகளையும், தற்கொலை களையும் பரிசளிக்கக் கூடியது. உங்களிருவர் விஷயத்தில் கள்ள உறவு எவ்வித சேதாரத்தை யும் ஏற்படுத்தாமல், முற்றுப் பெற்று விட்டது. சேதாரம் வேண்டும் என்று முற்றுப் பெற்றதை பலவந்த மாய் உடைத்து, திறக்கிறாய்.
பாங்க் சார் உன்னை ஏமாற்றி விட்டார் என்கிறாய்; உண்மையில், நீ உன் கணவனை ஏமாற்றி இருக்கிறாய்.
உன் கணவனுக்கு கூட விஷயம் அரசல் புரசலாய் தெரிந்து, மவுனம் காக்கிறான் என நம்புகிறேன்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகளே…
பாங்க் சாரின் போனையும், குடும்ப புகைப்படத்தையும், பரிசுப் பொருட்களை யும் தீயில் போட்டு எரித்து சாம்பலாக்கி விடு. அவரைத் தேடி அவரது ஊருக்கு போகாதே. இனி, அவர் உன்னை பார்க்க, பேச விரும்பினாலும் பார்க்காதே, பேசாதே.
உன் மீது, 50 சதவீதம் தப்பென்றால், 50 சதவீதம் தப்பு அவர் மீது. நடந்ததை கெட்ட கனவாய் மற. கைத்தொழிலில் கவனம் செலுத்து. சிறுக, சிறுக பணம் சேர்த்து, சொந்தமாய் வீடு கட்டு. உங்களிருவர் சம்பாத்தியத்தில், இரு குழந்தைகளை படிக்க வை.
உன் வயது 32. அடுத்த, பத்து ஆண்டுகள் உன் இளமைக் கொடி உச்சத்தில் பறக்கும். இனி, எந்த ஆணின் வலையிலும் விழுந்து விடாதே. நீ எந்த கெட்ட விஷயத்திலும் எளிதாக விழ மாட்டாய்; விழுந்தால் ஆயுளுக்கும் எழ மாட்டாய்; இதுதான் உன் கேரக்டர். உன் கேரக்டர் அறிந்து, ஐம்பது வயது ஆண்களை தவிர்.
உன் தாய் இருந்திருந்தால், உன்னை தகுந்த விதத்தில் கண்டித் திருப்பார்; அதைத்தான் நான் உனக்கு செய்கிறேன். திருந்தி, திருத் தமான வாழ்க்கை வாழு மகளே… நல்வாழ்த்துக்கள்!