நம் ஊரில் பல பேர் லக்கேஜ் போல தொப்பையையும் சேர்த்தே இழுத்துக் கொண்டு போகிறார்கள் நம்மையும் சேர்த்துதான். இதற்கென பிரத்யேக டயட், வாக்கிங் என செய்யாத வேலையே கிடையாது.
இத செஞ்சா உடம்பு கொறஞ்சிடும் அப்படின்னு யார் என்ன சொன்னாலும் அத உடனே செய்து பார்ப்பது உண்டு. எடை குறைந்துவிடாதா? தொப்பை கரைந்துவிடாதா என்ற நம்பிக்கை தான்.
ஆனால் எந்த சிரமமும் படாமல் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். உங்களுடைய தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போய்விடும்.
அப்படி இந்த சுரைக்காயில் என்னதான் இருக்கிறது?
சுரைக்காயில் விட்டமின்கள், தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன.
சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?
சுரைக்காயில் நீர்ச்சத்தும் அதிகளவு நார்சத்து உள்ளதால், உடல் பருமன் உள்ளவர்கள் அடிக்கடி சுரைக்காயை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
சுரைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் வராமல் இருக்கும்.
சுரைக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள், குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, மலச்சிக்கல், வாயுப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
உணவில் சுரைக்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால், அது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து உடலை உறுதிப்படுத்துகிறது.
தினமும் சுரைக்காயை ஒரே மாதிரியாக சாப்பிட எரிச்சலாக இருந்தால் தோசை மாவில் உளுந்தைக் குறைத்துக் கொண்டு, சுரைக்காயைச் சேர்த்து அரைத்து தோசை செய்யலாம்.
ஒரு நாள் ஜூஸ் செய்து அதில் உப்பு சேர்த்து குடிக்கலாம்.