உடல் கட்டுப்பாடு:உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். உதாரணமாக, தினமும் 2 கப் சாதம் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.
சாதாரணமான நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட வேண்டும். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, ப்ராக்கோலி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள் என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.
சுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது, உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம். இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3-4 முறை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.
உப்பை அதிகமாக சாப்பிட்டால், உடலில் தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல், அதனை குறைப்பதோடு, செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.
உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் இறுதியானவை, தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.