உடல் கட்டுபாடு:காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய். அதே போல் மிளகாய் என்றால் நமக்கு ஞாபத்திற்கு உடனே வருவது உரப்பு தான்.
அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை, முக்கியமாக குழந்தைகள். ஆனால் காரசாரமாக உண்ணும் இன்னும் சிலரோ மிளகாயை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள். பலருக்கு அதையும் மீறி அதனை பற்றி எதுவும் தெரிவதில்லை.
மிளகாயில் மட்டும் 200 வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதே போல் மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் கருப்பு என பல வண்ணங்களிலும் காணலாம்.
லேசான காரம் முதல் குடலே வெந்து போகும் அளவிற்கு கடுமையான காரத்தை கொண்டவைகள் இவைகள். ஆன்டி-பயாடிக் குணத்தை தவிர, இதில் பல உடல்நல பயன்களும் மருத்துவ குண நலன்களும் அடங்கியுள்ளது.
கொழுப்பை குறைக்கவும் உதவும்
மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
புரோஸ்டேட் புற்றுநோய் பரவுவதை தடுக்கும்
மிளகாயில் உள்ள காப்சைசின் புரோஸ்டேட் புற்றுநோய் உடலில் பரவுவதை தடுக்கும் என்று புற்றுநோய் ஆராய்ச்சி மையம், மார்ச் 2006 இல் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. மிளகாயில் உள்ள காப்சைசின் புரோஸ்டேட் புற்று அணுக்களை தற்கொலை செய்யத் தூண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
வயிற்று அல்சரை தடுக்கும்
வயிற்று அல்சரை பொறுத்த வரை, மிளகாயை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் மிளகாயானது, வயிற்றில் பாதுகாப்பான ஜூஸ்களை சுரக்க உதவி புரிந்து, அதன் மூலம் வயிற்றில் தேங்கியிருக்கும் பாக்டீரியாக்களை கொன்று, அல்சர் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்
உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கும், மிளகாய் உட்கொள்ளுதல் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று டாஸ்மானியா பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று தெரிவித்துள்ளது.
அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை ஜூலை 2006 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜெர்னல் ஆப் க்ளினிக்கல் நியூட்ரிஷன் என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.
இதயக்குருதி குழாய் நோய்களின் இடர்பாடு குறையும்
கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்கும். இதயக்குருதி குழாய் நோய்கள் வருபவர்களும் சரி, ஏற்கனவே வந்தவர்களுக்கும் சரி, மேற்கூறிய உடல்நல பயன்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.