Home பெண்கள் அழகு குறிப்பு உடல் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்

உடல் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்

48

jollyclip-5யை ப்ரிட்ஜில் வைக்காமல் வெளியே நான்கைந்து நாட்கள் வைத்துவிடுகையில் அதன் மேல் மஞ்சளாகப் படர்ந்திருக்கும் கிருமி தான் ஃபங்கஸ்.) இந்த ஃபங்கஸ், பாக்டீரியா, தோல் வியர்வை மற்றும் அழுக்கு, புரதம் போன்றவை எல்லாம் சேர்ந்து சருமத்தில் விரும்பத்தகாத துர்நாற்றத்தை உருவாக்கிவிடும். இது பரம்பரையாக சிலருக்கு வருகிறது என்று சொல்லப்பட்டாலும் அப்படி இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரலாம். வந்துவிட்டால் அதைக் குணப்படுத்த முடியாது, கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

1. உடல் துர்நாற்றப் பிரச்னை இருப்பவர்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கட்டாயம் குளிக்க வேண்டும்.

2. முடிந்தவரையில் சுடு தண்ணீர்க் குளியல் நல்லது.

3. தினமும் காலை மற்றும் மாலையில் குளித்தபின் அக்குள் மற்றும் மறைவுப் பகுதிகளில் ஆன்டி ஃபங்கஸ் பவுடர் தடவ வேண்டும். சர்ஃபாஸ் ((Surfaz) என்ற இந்தப் பவுடர் கடைகளில் கிடைக்கும். இரவில் தூங்கப் போகும் முன்னரும் இதைத் பூசிக் கொள்ளவேண்டும்.

4. அதிக உடல் துர்நாற்றம் கொண்டவர்கள் தினமும் Mupirocin Ointment அக்குள் மற்றும் மறைவிடங்களில் தடவிய பின் பவுடரும் போட வேண்டும், ஓரளவு பலன் கிடைக்கும். இந்தப் பிரச்னை வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பதால் தொடர்ந்து இந்த மருந்து மற்றும் பவுடரை பயன்படுத்த 90 சதவிகிதன் தீர்வு கிடைக்கும். கொஞ்ச நாளில் சரியாகிவிட்டது என்று நினைத்து பவுடர் போடுவதைத் தவிர்த்தால், அடுத்த சில நாட்களில் மீண்டும் வாடை அடிக்கத் தொடங்கிவிடும்.

5. சுத்தமாக துவைக்கப்பட்ட ஆடைகளையே அணிய வேண்டும். வெயில் காலத்தில் காட்டன் உடைகள் அணிவது நல்லது. அதிகப்படியான வியர்வையை உறிஞ்சிவிடும். இந்தப் பிரச்னை உடையவர்கள் வசதி மற்றும் வாய்ப்பு இருந்தால் ஒரு நாளில் இரண்டு தடவை உடை மாற்றிக் கொள்ளலாம்.