Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சி செய்வதில் சொல்லப்படும் முக்கிய தவறான கருத்துகள்

உடற்பயிற்சி செய்வதில் சொல்லப்படும் முக்கிய தவறான கருத்துகள்

93

உடல் கட்டுப்பாடுகள்:நீங்கள் ஜிம்மில் எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் என்பதில் தொடங்கி என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பது வரை, உடற்பயிற்சி பற்றி சொல்லப்படும் நூற்றுக்கணக்கான விஷயங்கள் உண்மையில் கட்டுக்கதைகளே. அவற்றில் முக்கியமான 7 பொய்களை இங்கே பார்க்கலாம்:

உடற்பயிற்சி உலகில், ஒவ்வொரு நாளும் நீங்கள் பல புதிய உண்மைகளையும் புரளிகளையும் படித்திட நேரிடும். இந்த அறிக்கைகள் எல்லாம் கட்டுக்கதையா அல்லது உண்மையா என யாரும் கண்டுகொள்வதே இல்லை என்பதே உண்மை. துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளும் பல விஷயங்களில் பெரும்பகுதியாக இந்த புரளிகளே நிரம்பியிருக்கின்றன. இவைகளில் சில உங்கள் வேலைகளை எளிதாக்கும்போது, சில உங்களை மோசமான சூழல்களில் தள்ளக்கூடும். இது குறிப்புகளும் யுக்திகளும் நீங்கள் உங்கள் இலக்கை விரைவாக அடைய உதவிடும் என்று நீங்கள் கருதினால், உண்மை நிலை அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் என்பதே வாஸ்த்தவம். நீங்கள் ஜிம்மில் எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் என்பதில் தொடங்கி என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பது வரை, உடற்பயிற்சி பற்றி சொல்லப்படும் நூற்றுக்கணக்கான விஷயங்கள் உண்மையில் கட்டுக்கதைகளே. துரதிருஷ்டவசமாக, இந்த புரளிகளில் பெரும்பாலானவை நம்பப்படுகின்றன.

1. கார்டியோ உடல்பயிற்சியுடன் தொடங்குதல்

அடுத்த முறை நீங்கள் ஜிம்முக்கு செல்கையில், உங்களுக்கு பின் வரும் ஒவ்வொருவரையும் கவனியுங்கள்; பெரும்பாலானோர் முதலில் டிரெட்மில்லை நோக்கியே விரைவர். ஆனால், அதுதான் சரியான உடற்பயிற்சி முறையா? இல்லை! உண்மையில், கார்டியோ பயிற்சியை தொடக்கத்திலேயே மேற்கொண்டால் உங்களது கிளைகோஜென் அளவு குறையவும் வாய்ப்புள்ளது. இதனால் எடை பயிற்சி பிரிவில் உடற்பயிற்சி செய்யும்பொழுது, உங்களது உடல் ஆற்றலை முழுமையாக செலுத்த முடியாமல் போகலாம். எனவே, எடைகள் தூக்குவதில் தொடங்குங்கள்; அது உங்கள் கார்டிசோல் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். இந்த வழிமுறையே உங்கள் உடற்பயிற்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

3sbrofboPracticing cardio first can lower your glycogen levels

2. காலையில் உடற்பயிற்சி செய்வதே சிறந்தது

நீங்கள் தினமும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வீர்களேயானால், காலை மாலை என எந்த கால வரையறையும் தேவையே இல்லை. காலையிலேயே உடற்பயிற்சி செய்வதில் உள்ள ஒரேயொரு நன்மை என்னவென்றால், நாள் முழுவதும் நீங்கள் உடற்பயிற்சி செய்யப்போகும் அந்த ஒரு மணிநேரத்தை நினைத்து பயந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதை தவிர, மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதும் அதே அளவில் பயனளிக்கும் என்பதே உண்மை.

3. உடற்பயிற்சி செய்வதற்கு முன், நீங்கள் உங்கள் தசைகளை நீட்டிட செய்ய வேண்டும்

உடற்பயிற்சிக்கு முன்பாக தசைகளை நீட்டிப்பது அவசியம் என்று யாராவது உங்களுக்குச் சொன்னால், நாங்கள் அதிலிருந்து வேறுபடுகிறோம். தசைகளை நீட்டுவதால் காயம் ஏற்படும் ஆபத்து குறைவதாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் அது உங்கள் தசைகளை பலவீனப்படுத்தி உங்களுக்கு காயம் ஏற்படும் ஆபத்தை 30% அதிகரிக்கிறது என்பதே உண்மை.

4. உடல்பயிற்சி செய்கையில் எவ்வளவு வியர்க்கிறதோ, அவ்வளவு உடல் எடையை இழக்கிறீர்கள்

எப்பொழுதுமே சொல்லப்பட்டு வரும் மிக பிரபலமான பொய் இதுதான்! சிலர் உடற்பயிற்சி செய்கையில் தங்களுக்கு அதிகமாக வியர்ப்பதால், அதிக உடல் எடையை இழப்பதாக நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், உங்களது வியர்வைக்கும் உடல் எடை குறைவதற்கும் எந்த நேரடி சம்பந்தமும் இல்லை. நீங்கள் கடினமாக உடற்பயிற்சி செய்வதை மேற்கொள்வதை நிறுத்தும் வரை, வியர்வை என்பது முக்கியமே அல்ல.

5. ஓடுவதால் உடல் எடை குறையும்

டிரெட்மில்லில் ஓடுவதால், கலோரிகளை சீக்கிரமாக குறைக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது உண்மை அல்ல. உடல் எடையை குறைக்க எடை பயிற்சியே சிறந்த வழியாகும்; கலோரிகளை இழக்க அதுவே வேகமான, எளிமையான வழியாகும்.

v96kpogg

6. அதிக வலி, அதிக பலன்

உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் முதல் சில நாட்களில், உங்களுக்கு உடல் வலி இருக்கலாம். ஆனால், நாளாக நாளாக உங்கள் உடல் அதற்கேற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்வதால், அந்த வலி தொடர்ந்து நீடிப்பதில்லை. எனினும், நீண்ட நாட்களாக உடற்பயிற்சி செய்தும் வலி தொடர்ந்தால், நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் அதீத உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் அல்லது தவறான முறையில் உடற்பயிற்சி செய்கிறீர்கள். காயங்களோ அல்லது வேறு ஏதேனும் உடல் கோளாறோ ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, உடனே ஒரு உடற்பயிற்சி நிபுணரை அணுகவும்.

7. குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்

நீங்கள் தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்துகொண்டே இருக்கும் வரை, உடற்பயிற்சி செய்யும் கால அளவை பற்றி கவலைப்பட தேவையில்லை. தினந்தோறும் உடற்பயிற்சி செய்யாமல், தொடர்ந்து இரண்டு மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்தாலும்கூட நீங்கள் உங்களது இலக்கை அடைய முடியாது. எனவே நீங்கள் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என கவலைப்படாமல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்​.​