பொது மருத்துவம்:மனித உடம்பிற்கு பாரிய அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புறக்காரணிகள் புகும்பட்சத்தில் அதற்கு உடம்பால் மேற்கொள்ளப்படும் நோயெதிர்ப்பே அழற்சி ஆகும்.
ஒவ்வாமை அல்லது அழற்சியை ஏற்படுத்தும் பிரதான புறக்காரணிகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
01. செல்லப் பிராணிகளிடம் இருந்து சிறு துகள்களாக வெளியேறும் தோல்
02. மருந்து வகைகள்
03. உணவுகள்
04. பூச்சிக்கடி
05. பங்கஸ்
06. ஏனைய காரணிகள்
பொதுவாக ஒருவருக்கு அழற்சி ஏற்பட்டால் கண்களில் சொரிவு, அடிக்கடி கண்ணீர் வழிதல், மூக்குவடிதல் மற்றும் தொடர்ச்சியான இருமல் போன்றன ஏற்படும்.
எவ்வாறிருப்பினும், அழற்சி ஏற்படும் பட்சத்தில் கட்டாயம் வைத்தியரை அணுக வேண்டும். எமது உடலை பரிசோதனை செய்து அதற்கு தகுந்த சிகிச்சை முறை வைத்தியரால் பரிந்துரைக்கப்படும்.
எமக்கு ஏற்பட்டுள்ள அழற்சியை கண்டுபிடிக்க சில உணவுப் பொருட்களை தவிர்க்குமாறு வைத்தியர் பரிந்துரைப்பார். அதே போல் தோல் பரிசோதனை, மற்றும் இரத்தப் பரிசோதனை போன்றவற்றை வைத்தியர் மேற்கொள்வார். அதற்கமைய அழற்சிக்கான சிகிச்சை அளிக்கப்படும்.
எனவே அழற்சி ஏற்படும் பட்சத்தில் பதற்றம் கொள்ள வேண்டாம். எமது உடலில் தங்கியுள்ள வேண்டப்படாத பொருளை வெளியேற்ற உடலால் மேற்கொள்ளப்படும் செயற்பாடே இந்த அழற்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.