கருவளையத்தை மறைக்க பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அந்த பழக்க வழக்கங்களை செய்யாமல், நோய்களை தடுப்பதற்கேற்ற வழிமுறைகளை பின்பற்றி. நமது கண்களை பொலிவோடு அழகாக வைக்க உதவும்.
சிலருக்கு கருவளையங்களுடன் சேர்ந்து, கண்களுக்கடியில் சுருக்கங்களும் இருந்தால், அவர்கள் ரத்தத்தில் புரதத்தின் அளவையும் சரிபார்க்க வேண்டும். குறைபாட்டின் அளவு தெரிந்து, அதற்கேற்ப உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும்.
அழகுப் பொருட்கள் பயன்படுத்தும் போது முதலில் கண்களிலேயே, அதன் அறிகுறியான அலர்ஜி தெரியும். அந்த அலர்ஜி நாளடைவில் கருவளையமாக மாறிவிடுகிறது. ஆகவே அவ்வாறு தெரிந்தால் கண்ட அழகுப் பொருட்களை எல்லாம் வாங்கி உபயோகிக்காமல், ஹைப்போ-அலர்ஜிக் காஸ்மெடிக்ஸ்களை வாங்கி பயன்படுத்தினால், எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
அனிமியா மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவை இருந்தால், கருவளையமானது ஏற்படும். ஆகவே அத்தகைய பாதிப்பு இருப்பவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அத்தகைய மருந்துகள் நோய்களை மட்டும் குணப்படுத்துதோடு, கண்களைச் சுற்றி உள்ள கருவளையங்களையும் போக்கும்.
குப்புற படுத்து தூங்கக்கூடாது. அதனால் முகத்திற்கு அழுத்தம் ஏற்பட்டு, கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு குறைந்தது 5 முதல் 6 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அதனால் அழகான கண்களை எளிதாக பெறலாம்.
சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், நிறமூட்டும் நிறமிகளான மெலனின் உருவாக்கம் அதிகரிக்கிறது. எந்த இடத்தில் அதிகமான அளவு மெலனின் இருக்கிறதோ, அந்த இடம் கருப்பாக மாறிவிடும். ஆகவே வெளியே செல்லும் போது கண்களுக்கு சன்கிளாஸ் அணிந்து செல்ல வேண்டும். இதனால் கண்களில் சூரியக் கதிர்கள் படுவதைத் தடுக்கலாம்.
புகைப்பிடித்தல், மது அருந்துதல், இரவு நேரங்களில் அதிக நேரம் ஊர் சுற்றுதல் போன்றவற்றாலும் கருவளையங்கள் வரும். மேலும் உடலிலேயே மற்ற இடங்களை விட, கண்களை சுற்றிள்ள பகுதி மிகவும் மெல்லியது. ஆகவே எந்த ஒரு நிகழ்வு உடலில் நடந்தாலும், அது முதலில் நம் கண்களிலேயே தெரிந்துவிடும். ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
ப்ளூபெர்ரி, பசலைக்கீரை, பீர்க்கங்காய், சிவப்பு முளைக்கீரை, காளான், உலர்ந்த திராட்சை, பன்னீர் திராட்சை, சப்போட்டா, அவகேடோ, கொய்யா, கொள்ளு, குதிரைவாலி அரிசி, கருப்பு உளுந்து, ராஜ்மா, ஆட்டீரல், காட்டு சீரகம் (வைல்ட் கியூமின்), சீஸ் – இவை அத்தனையும் கருவளையங்களை விரட்டும் சக்தி கொண்டவை.