Home பெண்கள் உடல் கட்டுப்பாடு Big Breast மார்பகங்கள் தளர்ந்து போகக் காரணமாகும் பழக்கங்கள்

Big Breast மார்பகங்கள் தளர்ந்து போகக் காரணமாகும் பழக்கங்கள்

38
“A professional fitter fitting the best bra for a young woman. Studio shot, grey background.”

முப்பது நாற்பது வயதுகளில் இருக்கும் பெண்கள் ஒவ்வொரு முறை வெளியேசெல்லும்போதும், மார்பகங்கள் அழகாகவும் சரியான வடிவத்திலும் தோன்ற, புஷ்–அப்–ப்ரா அணிய வேண்டியிருக்கலாம்.

வயது அதிகமாகும்போது மார்பகம் சற்று தளர்ந்துபோவது இயல்பானது தான். அதுமட்டுமின்றி கர்ப்பத்திற்குப் பிறகும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கூட மார்பகங்கள் தளர்ந்து போகலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கருக்களை சுமக்கும் பெண்களுக்கும் அதிகமாக இந்தப் பிரச்சனை வரலாம். இவை மட்டுமின்றி, பெண்களின் சில பழக்கங்களும் மார்பகங்கள் தளர்ந்து தொங்கிப்போகக் காரணமாகின்றன. அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் காரணங்கள் எப்படி மார்பகங்களை தளர்ந்துபோகச் செய்கின்றன என்று இப்போதுபுரிந்துகொள்வோம். இதைப் புரிந்துகொள்ளும்போது கச்சிதமான, அழகாகத் தோற்றமளிக்கும்மார்பகங்களைப் பெற தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க எளிதாக இருக்கும்.

தவறான ப்ரா அணிதல் (Wearing a wrong bra):

இதுதான் பெண்கள் செய்யும் பொதுவான தவறு. அழகான பட்டை கொண்டுள்ள ப்ரா அல்லது பார்க்க மிக அழகாக இருக்கும் ப்ராவைத் தேர்ந்தெடுப்பது மட்டும் போதாது. சௌகரியமாக இருக்கக்கூடிய, உங்கள் மார்பகங்களின் அளவுக்கும் வடிவத்திற்கும் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய சரியான ப்ராவைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம். ப்ரா மார்பகங்கள் முழுவதையும் தாங்கும்படி இருக்க வேண்டும். அளவு பொருந்தாத ப்ரா மார்பகங்களை முழுவதுமாகத் தாங்கிப் பிடிக்காது. மார்பகங்கள் சரியான இடத்தில் நிற்கும்படி செய்யாது. இது போன்ற ப்ரா அணியும்போது, மேல் பகுதியில் அல்லது பக்கவாட்டில் அக்குள் பக்கத்தில் உள்ள மார்பக சதை தெரியலாம். இதே போன்ற ப்ராவை தொடர்ந்து நீண்ட காலம் அணிந்துவந்தால், மார்பகத் திசு விரிவடையலாம், இதனால் மார்பகங்கள் தளர்ந்து தொங்கக்கூடும். சரியான அளவுள்ள ப்ரா மார்பகங்களை நன்றாகத் தாங்கிப்பிடிக்கும். மார்பகங்கள் சரியான இடத்தில் பொருந்தியிருக்கும்படி செய்யும். இருபுறமும் சீரான தோற்றம் கிடைக்க உதவும். எனவே, அடுத்த முறை ஷாப்பிங் செல்லும்போது, ப்ரா வாங்க நல்ல கடைக்குச் சென்று, சரியான ப்ராவை தேர்ந்தெடுக்க கடையில் இருப்பவர்களிடம் உதவி பெற்று சரியான ப்ராவைத் தேர்ந்தெடுங்கள்.

திடீர் உணவுக் கட்டுப்பாடு (Crash dieting):

திடீரென உணவைக் குறைத்து குறுகிய காலத்தில் எடையைக் குறைப்பது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, மார்பகங்களுக்கும் கெடுதல்தான். பெரும்பாலும் இப்படி திடீரென்று எடை குறைத்தால், கட்டுப்பாடற்ற அளவில் உணவை எடுத்துக்கொண்டு அதே போன்று திடீரென்று எடை கூடுவதே வழக்கம். உடலில் உள்ள கொழுப்பின் அளவு திடீரென்று சீரற்ற முறையில் குறைந்து அதிகரித்தால், உங்கள் தோல் பாதிக்கப்படும். குறிப்பாக மார்பகங்களில் இதன் பாதிப்பு அதிகம். கொழுப்பு குறைந்து அதிகரிக்கும்போது அதே வேகத்தில் மார்பகங்கள் வடிவம் மாற முடியாது, அதனால் அவை தளர்ந்து தொங்கிவிடலாம். ஆகவே, சரியான ஊட்டச்சத்தை அளிக்கும் உணவுத்திட்டத்தைப் பின்பற்றுவதும், எடை குறைப்பதற்கு அல்லது அதிகரிப்பதற்கு உணவுத்திட்ட மாற்றங்களைப் படிப்படியாகச் செயல்படுத்துவதும் நல்லது.

ஸ்போர்ட்ஸ் ப்ரா அணியாமல் உடற்பயிற்சி செய்வது (Exercising without sports bra):

உடற்பயிற்சி செய்யும்போது மார்பகங்கள் மேலும் கீழும் குலுங்குவது சாதாரணமானது தான், அதனால் பிரச்சனை ஏதும் இல்லை என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள்! மார்பகங்கள் அளவுக்கு அதிகமாக அசைந்தால், பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்பது மட்டுமல்ல, அது மார்பகத் திசுக்களுக்கும் கெடுதல் விளைவிக்கும். இதனால் மார்பகத் திசுக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றன. தொடர்ந்து மேலும் கீழும் குலுங்குவதால் மார்பகத் திசு விரிவடையலாம், மீண்டும் அது பழைய நிலைக்கு வராது. இதனால் மார்பகம் தளர்ந்துவிடலாம். எனவே சாதாரண நேரத்தைவிட, உடற்பயிற்சி செய்யும்போதுதான் மார்பகங்களுக்கு நன்றாகத் தாங்கிப்பிடிக்கின்ற ப்ரா தேவை. வழக்கமாக அணியும் ப்ரா அந்த அளவுக்கு தாங்கிப்பிடிக்காது. ஸ்போர்ட்ஸ் ப்ராவில் பலவகை உள்ளது. உடற்பயிற்சியின் தன்மைக்கு (உடற்பயிற்சியின் தாக்கம் குறைவாக இருக்கலாம் அல்லது கடினமான தாக்கமாக இருக்கலாம்) ஏற்ப பொருத்தமானதை வாங்கிக்கொள்ளலாம். ஆகவே, உடற்பயிற்சி செய்யும் முன்பு சௌகரியமான, கச்சிதமாகப் பொருந்துகின்ற ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்துகொள்ள மறக்க வேண்டாம்.

தவறான உடல் தோரணை (Wrong body posture):

நீண்ட நேரம் கணினியில் வேலை செய்யும் பெண்கள், முன்னோக்கி வளைந்து உட்கார்ந்திருப்பது சகஜம். தாய்ப்பாலூட்டும் பெண்களும் இந்த தவறான உடல் தோரணையைக் கொண்டிருப்பார்கள். முன்னோக்கி வளைந்து இருப்பதால் முதுகு மற்றும் கழுத்துத் தசைகள் மட்டுமின்றி மார்பகங்கள் தளர்ந்து போகவும் அவை வழிவகுக்கும். இப்படி முன்னோக்கி வளைந்து இருப்பதால் நெஞ்சுத் தசைகள் மற்றும் தோள் படைகளுக்கு அதிக சிரமம் ஏற்படுகிறது. இதனால் மார்பகங்கள் தளர்ந்து தொங்கிவிடலாம். எனவே, உட்காரும்போதும் நிற்கும்போதும் நடக்கும்போதும் நிமிர்ந்தபடி இருக்க வேண்டியது முக்கியம். உங்கள் அலுவலக நாற்காலி உங்கள் முதுகை முழுவதுமாகத் தாங்கி நிறுத்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைக்குப் பாலூட்டும்போது சிறிய தலையணையை வைத்துக்கொள்ளலாம்.

ப்ரா அணியாமல் விடுவது (Not wearing a bra):

ஆச்சரியப்பட வேண்டாம்! இந்தியாவில் இது சகஜம்! பெண்கள், குறிப்பாக இல்லதரசிகள் வீட்டில் இருக்கும்போது ப்ரா அணிவதில்லை. பெரும்பாலும் நாள் முழுதும் அவர்கள் நைட்டி மட்டும் அணிந்துகொண்டு ப்ரா அணியாமல் இருப்பதுண்டு. வீட்டில் தானே இருக்கிறோம் என்ற எண்ணமும், யாரும் வரப்போவதில்லை என்ற எண்ணமும் இதற்குக் காரணம். இது மிக ஆரோக்கியமான பழக்கமல்ல. ஆனால், மார்பகங்களைத் தாங்கிப்பிடிக்கும் ப்ரா அணிவது நாள் முழுதுமே தேவையான ஒன்று, நீண்ட நாட்கள் ப்ரா அணியாமல் இருந்தால் மார்பகங்கள் தளர்ந்து தொங்கிவிடும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. ஆகவே, வீட்டிலிருக்கும்போதும் நாள் முழுதும் ப்ரா அணிய வேண்டும். சௌகரியமாக இருக்க வேண்டுமென்றால் காட்டன் ப்ரா வாங்கிப் பயன்படுத்தலாம்.

புகைபிடித்தல் (Smoking):

அடிக்கடி புகைபிடிக்கும் பெண்களுக்கு ஓர் அறிவுரை. புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதற்கு இதையும் ஒரு காரணமாகக் கூறலாம். ஆனால் அழகிய கட்டுக்கோப்பான உடல் தோற்றம் வேண்டுமானால் இதுவும் முக்கியம். சிகரெட் தயாரிப்புகளில் இருக்கும் வேதிப்பொருள்கள் மார்பகங்களின் இயற்கையான மீள்தன்மையையும் கொல்லாஜென் அளவையும் குறைக்கின்றன இதனால் மார்பகங்கள் தளர்ந்து போகின்றன. புகைபிடிப்பது சருமத்திற்குக் கிடைக்கும் இரத்த ஓட்டத்தையும் குறைப்பதால் முதுமையும் தோன்றுகிறது. எனவே, இளமையான அழகான மார்பக அழகை விரும்பினால், புகைபிடிப்பதைப் பற்றி யோசிக்கவும் வேண்டாம்!

சூரிய ஒளி படுதல் (Sun exposure):

தரமான சன்ஸ்கிரீன் வாங்குவோம், வெயிலில் செல்லும் முன்பு மறக்காமல் முகத்திலும் கைகளிலும் பூசிக்கொள்வோம். ஆனால், உங்கள் ஆடையையும் கடந்து சூரிய ஒளி மார்பகங்களையும் வந்தடையும் என்பதைப் பற்றி எப்போதாவது யோசித்தீர்களா? உடலின் பிற பாகங்களைப் போலவே மார்பகங்களின் சருமமும் சூரிய ஒளியில் உள்ள UV கதிர்களை கவருகின்றன. நீச்சலுடை அல்லது பிக்கினி அணிந்து நீங்கள் மார்பகங்களை மூடினாலும் UV கதிர்கள் சம்பந்தமான சேதங்கள் மார்பகங்களுக்கு ஏற்படக்கூடும். ஆகவே, சூரிய ஒளி படும் மற்ற உடல்பாகங்கள் மட்டுமின்றி, வேறு எங்கெல்லாம் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பது இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும்!

அதிகமாக மது அருந்துதல் (Too much alcohol):

அதிகமாக மது அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குக் கெடுதல் என்பது நமக்குத் தெரியும். கட்டுப்பாடற்ற மதுப்பழக்கமும் சருமத்திற்கு சேதங்களை ஏற்படுத்தும். அதிகமாக மது அருந்துவதால் சருமத்தின் மீள்தன்மை குறையும். அதோடு, மார்பகங்களும் தளர்ந்து விடலாம்.

மாய்ஸ்டுரைசர் பயன்படுத்தாமல் விடுவது (Not applying a moisturiser):

மார்பக சருமம் உடலின் மற்ற பகுதியிலுள்ள சருமத்தைப் போன்றது தான். இந்தத் திசுவுக்கும், வறண்டு போகாமல் தடுக்க ஈரப்பதம் தேவைப்படும். தோலில் ஈரப்பதம் குறைந்தால் முதுமையின் அறிகுறிகளான தோல் சுருக்கங்கள் வரத்தொடங்கும். எனவே, மாய்ஸ்டுரைசர் போடும்போது மார்பகங்களை மறந்துவிட வேண்டாம்! தினமும் குளித்த பிறகு உடல் முழுதும் மாய்ஸ்டுரைசர் போடுவது நல்லது.

மார்பகங்கள் தளர்ந்து போய் இருந்தால், எவ்வளவு விலை அதிகமான ஆடை அணிந்தாலும்உங்கள் அழகு நிறைவடையாது. உண்மையிலேயே அழகாகக் காட்சியளிக்க வேண்டும் எனநீங்கள் நினைத்தால், உங்கள் பெண்ணழகினை கவனமாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!பிடித்த நிறத்தில் விதவிதமான ஆடைகளை வாங்குவது சரிதான்! அதற்கு முன்புஉங்கள் மார்பகங்களை சரியான இடத்திலும், சரியான வடிவத்திலும் தாங்கிப்பிடிக்கும்சரியான அளவுகொண்ட ப்ரா வாங்குவது முக்கியம்!