நோர்வேயை சேர்ந்த மொடல் ஒருவர் நீச்சலுடை மாத்திரம் அணிந்தநிலையில், லண்டன் வீதியோரத்தில் நின்றுகொண்டு, தனது மார்பகங்களை பெரிதாக்குவதற்கு பொதுமக்களிடம் யாசகம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தினார். ஜூலியன் ஸ்னேக்ஸடட் எனும் இந்த யுவதியே இவ்வாறு விசித்திர நோக்கத்துக்காக பணம் சேகரிப்பதாகக் கூறி யாசகம் பெற்றார். பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள வீதியொன்றில் கறுப்பு நிற நீச்சலுடை மாத்திரம் அணிந்த நிலையில் இவர் நின்றுகொண்டிருந்ததுடன், தான் ஒரு மொடல் எனவும் மார்பக சத்திர சிகிச்சைக்காக பணம் தேவைப்படுவதாகவும் எழுதப்பட்ட பதாகையொன்றையும் ஏந்தியிருந்தார்.
ஜூலியனுக்கு சிலர் பணம் கொடுத்தனர். ஆனால், வேறு பலர் அவரின் நடவடிக்கையால் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக பெண்கள் பலர், வெளிப்படையாகவே தமது அதிருப்தியை தெரிவித்தனர். ஜூலியனுக்கு அறிவுரை கூறிய பெண் ஒருவர், ‘அழகு என்பது வெளித்தோற்றத்துடன் மாத்திரம் தொடர்பானதல்ல. அது உள்ளிருந்து வருவது. நீங்கள் அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள் என்பதில் இது தங்கியுள்ளது’ எனக் கூறினார்.
தனது 5,000 ஸ்ரேலிங் பவுண்கள் (சுமார் 900,000 ரூபா) தேவைப்படுவதாக ஜூலியன் தெரிவித்தார். அவ் வழியே சென்ற பலர் ஜூலியனுக்கு பணம் வழங்கிய நிலையில் சிலர் அவருடன் செல்பீ படம்பிடித்துக்கொண்டனர்.