பெண்கள் என்றாலே அமைதியாக, நாம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு மட்டும் இருக்க வேண்டும் என்று விரும்பும் நாம் அந்த விஷயங்களில் மட்டும் தன்னை மிஞ்சும் பெண்ணாக தன்னுடைய வாழ்க்கைத்துணை இருக்க வேண்டும் என்று விரும்புவதுண்டு.
பொதுவாகவே பிடிவாத குணமுடைய பெண்களுடன் வாழ்க்கை நடத்துவது ரொம்ப கஷ்டம் என்று ஆண்கள் நினைப்பதுண்டு. நன்கு யோசித்துப் பார்த்தால் அது மிகவும் சுலபமான ஒன்று தான். ஆனால் அவர்களைப் பற்றி நன்கு புரிந்து கொண்டிருப்பது அவசியம்.
பிடிவாத குணம் உடைய பெண்கள் தான் சிறந்த மனைவியாகத் திகழ்வார்கள்.
கணவன் சோர்வடையும்போது தேற்றிவிடுவது, ஊக்கம் தருவது, தன்னம்பிக்கை கொண்டிருப்பது என அத்தனை குணங்களும் பிடிவாதம் நிறைய உள்ள பெண்களுக்கு இருக்கும்.
பிடிவாத குணமுடைய பெண்கள் ஒரு விஷயத்தின் மீது வைக்கும் காதல் உண்மையானதாகவும் உறுதியானதாகவும் இருக்கும்.
அன்பு, சோகம், கோபம் எதுவானாலும் அதை முழு மனதுடன் வெளிப்படுத்துபவர்கள் பிடிவாத குணமுடைய பெண்கள் தான்.
உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசாமல் முகத்துக்கு நேராக பளிச்சென எதையும் சொல்லிவிடும் பண்பு இவர்களிடத்தில் தான் உண்டு.
எவ்வளவுக்கு எவ்வளவு பிடிவாதம் இருக்கிறதோ அதைவிட பல மடங்கு லூட்டியிலும் வெளுத்து வாங்குவார்கள். நீங்கள் எதிர்பாராத சமயங்களில் அவர்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன குறும்புகளில்கூட அத்தனை அழகு மிளிரும்.
அவர்கள் போடும் செல்லச் சண்டைகள் சில சமயங்களில் நம்மையும் சேர்த்து குழந்தைப் பருவத்துக்கே கூட்டிச் செல்லும்.