Home அந்தரங்கம் உடலுறவால் ஏற்படும் நன்மைகள் (Benefits Of Having Sex)

உடலுறவால் ஏற்படும் நன்மைகள் (Benefits Of Having Sex)

101

பாலியல் விருப்பம் என்பது மனிதர்களின் உள்ளார்ந்த இயல்பு. ஆரோக்கியமான பாலியல் செயல்பாடு என்பது சந்தோஷமான மற்றும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய உணர்வு சார்ந்த விஷயமாகும். உடலுறவில் ஈடுபடும் இருவருக்குமிடையேயான நம்பிக்கை மற்றும் பிணைப்பு, சுகாதாரம் ஆகியவற்றை இது மேம்படுத்துகிறது. மனிதர்கள் பாலியலை நாடிச்சென்று அடையும் வகையில் அமைந்துள்ளனர்.

பாலியல் என்பது எண்ணங்கள், கற்பனை, மனப்பாங்கு, நம்பிக்கைகள், நடத்தைகள், மதிப்புகள், பாத்திரங்கள், நடைமுறைகள் மற்றும் உறவுகள் போன்ற பல்வேறு வடிவங்களில் இருக்கலாம். பாலியல் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கான முக்கிய வழிகளில் ஒன்று உடலுறவாகும். உடலுறவு மற்றும் உடலுறவிற்கு பிந்தைய பிணைப்பு ஆகியவற்றில் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயான (ஒரு ஆண் மற்றும் பெண்) ஒருங்கிணைந்த ஈடுபாடே ஆரோக்கியமான பாலியல் செயல்பாடாகும். இந்த செயல்பாட்டில் தொடர்ச்சியான ஹார்மோன்கள் ஈடுபடுவதன் விளைவாக உடல் அசைவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு அதிக அளவிலான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. பாலியல் செயல்பாட்டில் இவ்வளவு நேரம் ஈடுபடவேண்டுமென்று எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. ஒரு ஆரோக்கியமான பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுவதால் பல்வேறு சுகாதார நன்மைகள் உள்ளன.

உடலுறவால் ஏற்படும் நன்மைகள் சில பின்வருமாறு (Some of the Benefits of having Sex are):

உடல் தகுதியை மேம்படுத்துகிறது: உடலுறவில் ஈடுபடும்போது எரிக்கப்படும் கலோரியின் அளவானது ஒரு நல்ல உடற்பயிற்சி செய்தால் எரிக்கப்படும் கலோரியின் அளவிற்கு சமமாகும். மேலும் உடலுறவானது அதில் ஈடுபடும் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. இவ்வாறாக உடலுறவானது அதில் ஈடுபடுகிற இருவரின் உடல் தகுதியை மேம்படுத்த உதவுகிறது.

பெண்களின் நீர்ப்பை கட்டுபாட்டை மேம்படுத்துகிறது: உடலுறவானது இடுப்பு தள தசைகளுக்கான ஒரு நல்ல உடற்பயிற்சியாக செயல்படுகிறது. புணர்ச்சிப் பரவசநிலையின் போது உண்டாகும் தசை சுருக்கம் இடுப்பு தள தசைகளை மேலும் வலுப்படுத்துகிறது. இடுப்புத் தசைகள் வலுப்பெறுவதால் எதிர்காலத்தில் சிறுநீர் அடங்காமை பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது: மன அழுத்தம் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது என்பது உண்மையாகும். வழக்கமாக உடலுறவில் ஈடுபடுதல், மன அழுத்தத்தைக் குறைத்து நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்துகிறது.

மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை குறைக்கிறது: ஆக்ஸிடோசினை அதிகப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மன அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது. அதிக அளவில் விந்துவை வெளியேற்றும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன அழுத்தம் குறைக்கப்பட்டு உறவு மேம்படுத்தப்படுகிறது: ஒரு ஜோடி தொடுதல், முத்தமிடுதல் மற்றும் பிற நெருக்கமான பாலியல் செயல்களில் ஈடுபடும்போது ‘ஆக்ஸிடாஸின்’ (அரவணைப்பு ஹார்மோன்) இரத்தத்தில் கலக்கிறது. இந்த சூழ்நிலைகளின் கீழ் ஆக்ஸிடாஸின் ஒரு நரம்பணுக்குணர்த்தியாக செயல்பட்டு மன அழுத்த ஹார்மோனான ‘கார்டிசோல்’ நிலையைக் குறைக்கிறது. எனவே பாலியல் செயல்பாடுகளுக்குப் பின்னர் அதில் ஈடுபட்ட ஜோடி புத்துணர்ச்சியுடன் நன்றாக உணரத் தொடங்குவார்கள். வழக்கமான உடலுறவு, ஜோடிகளுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது.

விறைப்புத் தன்மையை (பாலியல் இயக்கி) அதிகரிக்கிறது: வழக்கமாக உடலுறவில் ஈடுபடுதல் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தி, விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த மேம்படுத்துதலானது நேர்மறை வலுவூட்டல் மற்றும் பாலியலின் நீடித்த பயனுள்ள விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.