கோடைக்கால சீசன் பழங்களுள் ஒன்று தான் தர்பூசணி. இந்த தர்பூசணி பழத்தில் தனித்துவமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆர்கானிக் உட்பொருட்கள் நிறைந்துள்ளதால், இது பல்வேறு நன்மைகளை வழங்கும். குறிப்பாக தர்பூசணியில் வைட்டமின் சி, கால்சியம், மக்னீசியம், நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் அதிகளவிலான புரோட்டீன் போன்றவை நிறைந்துள்ளது. அதோடு வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, நியாசின், தையமின் மற்றும் பல்வேறு கரோட்டினாய்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான லைகோபைன் உள்ளது.
இத்தகைய தர்பூசணி பழம் வயாகரா போன்று செயல்படும் என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் தர்பூசணியை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய், வெப்ப பக்கவாதம், மாகுலர் திசு சிதைவு போன்ற பிரச்சனைகள் அனைத்தும் தடுக்கப்படும்.
அதிலும் ஒருவர் தர்பூசணி பழத்தை அரைத்து ஜூஸ் தயாரித்து, அத்துடன் இஞ்சி சாற்றினைக் கலந்து குடித்தால் இன்னும் ஏராளமான மற்றும் நாம் எதிர்பார்த்திராத நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? அதிலும் இந்த ஜூஸை ஆண்கள் குடித்து வந்தால், விறைப்புத்தன்மை பிரச்சனை சரிசெய்யப்படும் மற்றும் பெண்கள் குடித்தால், உடல் சுத்தமாக நச்சுக்களின்றி இருக்கும்.
இப்போது தர்பூசணி ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.
விறைப்புத்தன்மை பிரச்சனை ஆண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் விறைப்புத்தன்மை கோளாறு. அதிலும் வயது அதிகரிக்கும் போது அனைத்து ஆண்களும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது இது தான். விறைப்புத்தன்மை பிரச்சனை ஆண்களுக்கு வருவதற்கு காரணம், உயர் இரத்த அழுத்தம், சர்ஜரி மற்றும் மருந்துகள் தான் காரணம்.
இரத்த ஓட்டத்தை சீராக்கும் தர்பூசணியில் உள்ள எல்-சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் மனித உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். முக்கியமாக இது இரத்த நாளங்களை தளர்வடையச் செய்யும். இதன் விளைவாக உடல் முழுவதும், குறிப்பாக ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, ஆண்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை பிரச்சனை தடுக்கப்படும். பெண்களுக்கும் இது மிகவும் நல்லது. பெண்களும் இந்த பானத்தைக் குடித்தால், இரத்த ஓட்டம் சீராக்கப்படும். மேலும் தர்பூசணி இஞ்சி ஜூஸ் வயதான காலத்தில் சந்திக்கும் தலைச்சுற்றல் மற்றும் சோம்பலைத் தடுக்கும்.
இஞ்சி இஞ்சி இயற்கையாகவே உடலின் வெப்பநிலையை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை தூண்டிவிடும். இஞ்சியில் இருந்து வீசும் நல்ல நறுமணம் மற்றும் ப்ளேவர்கள், ஒரு நல்ல பாலுணர்ச்சியைத் தூண்டும்
பொருளாக செயல்படுவதோடு, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்படத் தூண்டும். இப்போது தர்பூசணி இஞ்சி ஜூஸை எப்படி தயாரிப்பது என்று காண்போம். தேவையான பொருட்கள்: * தர்பூசணி – 1 * இஞ்சி – 1 இன்ச் * ஐஸ் கட்டிகள் – சிறிது
செய்முறை: * முதலில் தர்பூசடிணியை வெட்டி, அதன் உட்பகுதியை துண்டுகாக்கிக் கொள்ள வேண்டும். முக்கியமாக தர்பூசணியின் விதைகளை நீக்கி விட வேண்டாம். தர்பூசணி விதைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் குளோரோபில்கள் உள்ளன.3 கப் தர்பூசணி துண்டுகளை எடுத்து மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். * பின் அத்துடன் 1 துண்டு இஞ்சி மற்றும் சில துண்டுகள் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு அரைத்து குடிக்க வேண்டும். * பின்பு வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 டம்ளர் குடித்து வந்தால், அது வயிற்றை நிரப்புவதோடு, இது மிகச்சிறந்த காலை உணவாகவும் இருக்கும். இப்போது இந்த பானத்தைக் குடிப்பதால் கிடைக்கும் இதர சில நன்மைகள் என்னவென்று காண்போம்.
வெப்ப பக்கவாதம் கோடைக்காலத்தில் உடல் சூடு மற்றும இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் தர்பூசணி பழத்தை அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸைக் குடித்தால், அது உடல் வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதற்கு தர்பூசணியில் உள்ள அதிகளவிலான நீர்ச்சத்து தான் காரணம். இந்த நீர்ச்சத்து அதிகளவு வியர்வையை சுரக்கச் செய்து, உடலை கோடையில் குளிர்ச்சியுடன் வைத்து, வெப்ப பக்கவாதம் வருவதைத் தடுக்கும்.
இதய ஆரோக்கியம் தர்பூசணியில் உள்ள லைகோபைன் என்னும் கரோட்டினாய்டு, இதய செயல்பாட்டை மேம்படுத்தும். இதில் உள்ள பீட்டா கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும ஆன்டி-ஏஜிங் பண்புகள், இதயத்தின் இளமையைத் தக்க வைத்து, முதுமையில் தாக்கக்கூடிய இதய பிரச்சனைகளைத் தடுக்கும். தர்பூசணியில் இருக்கும் வைட்டமின் சி, கரோட்டினாய்டு மற்றும் பொட்டாசியம், கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும்.
புற்றுநோயைத் தடுக்கும் தர்பூசணியில் உள்ள லைகோபைன், புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும். ஆய்வுகளில் லைகோபைன் புரோஸ்டேட், மார்பகம், நுரையீரல் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த பழத்தின் ஜூஸை அடிக்கடி குடிக்கும் பழக்கத்தைக் கொண்டு, புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடுங்கள்.
இரத்த அழுத்தத்தை சீராக்கும் தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள பொட்டாசியம், இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தில் உள்ள தடையைப் போக்கி, இரத்த ஓட்டத்தை சிறப்பாக தூண்டிவிட்டு, இதயத்தில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும். இப்பழத்தில் உள்ள கரோட்டினாய்டு, இரத்தக்குழாய்கள் தடிமனாவதைத் தடுத்து, இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்கும்.