Home இரகசியகேள்வி-பதில் திருமணத்துக்கு முன், ஒரு தடவையாவது செக்ஸ் வைத்துக் கொண்டால் நல்லது என்று தனது நண்பர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்

திருமணத்துக்கு முன், ஒரு தடவையாவது செக்ஸ் வைத்துக் கொண்டால் நல்லது என்று தனது நண்பர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்

184

என்னுடைய ஆணுறுப்பில் மற்றவர்களைப் போல் இல்லாமல், மேல் தோல் முழுவதும் மூடி உள்ளது. அதைச் சிறிது பின்னுக்குத் தள்ளினால்கூட வலிக்கிறது.

நான் உடலுறவில் ஈடுபட்டால் உறுப்பில் ஏதேனும் காயம் ஏற்படுமா? என்னால் முழுமையாக உறவில் ஈடுபட முடியுமா? அல்லது இதை நிவர்த்தி செய்ய ஏதேனும் வழி உள்ளதா?

உங்களுக்கு இருப்பது மிகவும் எளிதாகச் சரி செய்யக் கூடிய பிரச்னை. இதை நிவர்த்தி செய்யவே முன்தோல் நீக்கம் எனும் மிகச் சுலபமான அறுவை சிகிச்சை உள்ளது.

உடனே உங்கள் ஏரியா சர்ஜனைப் பார்த்து, வெட்கப்படாமல் விஷயத்தை விளக்குங்கள். உபரித் தோலை அவர் நீக்குவார். உங்கள் தொல்லை விலகிவிடும்.

=====——————————————————————-
26 வயது ஆண் நான். அதில்தான் எனக்கு சந்தேகம். ஆம். நான், 90 சதவீதம் ஆணாகவும், மீதி 10 சதவீதம் பெண்ணாகவும் உள்ளேன். மேலும் எனக்கு “ஹோமா“ செக்ஸின் மீதுதான் ஆர்வம் உள்ளது.

நண்பர்கள் இரண்டு பேருடன் “செக்ஸ்“ வைத்துக் கொண்டேன். பெண்களைக் கண்டாலே எனக்கு எந்தவித உணர்ச்சியும் வருவதில்லை. எனக்கு பயமாக உள்ளது. நான் திருமணம் செய்துகொள்ளலாமா? எனக்கு உளவியல் ரீதியான பிரச்னையா? அல்லது ஹார்மோன் ரீதியான பிரச்னையா? நல்ல தீர்வு சொல்லவும்.

நீங்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மனிதர்களும், ஆண்-பெண் கலவைகள்தான். நீங்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் “ஹோமா“ என்கிற ஓரினச் சேர்க்கையும் “ஹெட்ரோ“ என்கிற எதிர்பாலினச் சேர்க்கையும் – இரண்டையுமே செய்யத் தோதானவைதான்.

இளவயதில் கலவியில் பரிசோதனைகள் செய்யும் காலகட்டத்தில், “சும்மா கொஞ்சம் ஹோமோ செக்ஸையும் செய்து பார்ப்போமே“ என்பது ஓர் இயல்பான தேடுதல் வேட்கைதான்.

இந்த “சும்மா கொஞ்சம்” கேஸ்களில் மிகச் சிலர்தான் நிரந்தர ஹோமோசெக்ஸ் பிரியர்களாக ஆகிறார்கள். மற்றவர்கள் அடுத்த கலவி நிலையான ஹெட்ரோ செக்ஸீக்கு சுலபமாகத் தாவி விடுகிறார்கள்.

இதில் நீங்கள் எந்த வகை என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். ஆனால், எதையும் தெரிந்துகொள்வதற்கு முன், திறந்து மனத்தோடு அணுகுவது அவசியம். யாருக்குத் தெரியும்?

ஒருவேளை எதிர்பாலினம், ஒரே பாலினத்தைவிட அதிக சுவாரஸ்யமாக இருக்கலாமே! இல்லாமலா இத்தனை போ் காதல், கள்ளக் காதல், கல்யாணம் என்று எதிர்இனம் சேரத்துடிக்கிறார்கள்.

முதலில் மனத்தளவில் உங்கள் இஷ்டக்கன்னிகளை எண்ணி சல்லாபித்துப் பழகுங்கள். பிடித்தால், பிரச்னை ஓவர். இல்லாவிட்டால், உங்கள் ஊர் சைக்கியாட்ரிஸ்டை சந்தித்துத் தொடர் ஆலோசனை பெறுங்கள்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எனக்கு 27 வயது. திருமணம் ஆகவில்லை. திருமணத்துக்கு முன், ஒரு தடவையாவது செக்ஸ் வைத்துக் கொண்டால் நல்லது என்று தனது நண்பர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்வது சரியா?

சரியா, தவறா என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க நான் என்ன நீதிபதியா? ஏதோ மனநல மருத்துவர் என்ற ரீதியில் திருமணத்துக்கு முன் தாம்பத்தியம் ஆரோக்கியமா இல்லையா என்று மட்டும் சொல்லமுடியும்.

எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய்கள் பலரை அவஸ்தைப்படுத்துவதற்கு முக்கியமான காரணமே, இதுபோல இளைஞர்கள் ”அக்னிப்பரீட்சை” செய்து பார்ப்பதுதான்! அட எய்ட்ஸை விடுங்கள். அது எல்லா இளைஞர்களுக்கும் அநேகமாகத் தெரிந்திருக்கிற அபாயம்.

பல இளைஞர்களுக்குத் தெரியாத சில அபாயங்களும் உண்டு – ஹெபடைடிஸ், சிபிலிஸ், கொனோரியா மாதிரியான பால்வினை நோய்கள்.

இந்த விலை கொடுத்து கற்றுக்கொள்ள இதென்ன கம்பசூத்திரமா? உங்கள் நண்பர்கள் வேண்டுமானால் செய்முறை பயிற்சிக்குப் பிறகே தேறுபவர்களாக இருக்கட்டும். நீங்கள் கேள்வி ஞானத்தைக்கொண்டே கலக்கிவிடலாம். கல்யாணம் வரை பொறுங்கள்!