Home குழந்தை நலம் உங்கள் குழந்தை இரவில் கட்டிலில் சிறுநீர் கழிக்கிறதா?

உங்கள் குழந்தை இரவில் கட்டிலில் சிறுநீர் கழிக்கிறதா?

38

படுக்கையை நனைத்தல் (Bed Wetting) என்பது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனையாகும். மருத்துவத்தில் இதனை (Nocturnal Enuresis) எனவும் அழைப்பர். வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்போதே சிறுநீர் கழிப்பது.

காலையில் எழுந்தவுடன் எப்படிப் பல் துலக்க வேண்டும், உணவை எப்படிச் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தைக்கு நாம்தான் கற்றுக் கொடுக்கிறோம். இதேபோல் இரவுத் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், எப்படிக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்பதைக் கற்றுத் தந்தால் இதை சரிசெய்யலாம்.

4 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30 சதவீதமும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதமும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 3 சதவீதமும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஒரு சதவீதமும் இப்பிரச்சினையால் துன்பப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பெண்கள்

ஒரே குடும்பத்தில் அதிகம் காணப்படுகிறது. பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிகம். பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகள் முதிர்ச்சியடைவது சற்று காலதாமதமாதல் இது ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே, கால ஓட்டத்தில் தானாகவே மறைந்துவிடும். மாறாக சிறுநீரக தொற்றுநோய்களாலும் ஏற்படலாம். அரிதாக கட்டிகள், பிறவியிலே உறுப்புகளில் இருந்த அசாதாரண நிலைகள் போன்றவையும் காரணமாவதுண்டு. அல்லது மனதில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருக்கலாம். உடல்நலக்கோளாறு என்று பார்த்தால் சிறுநீரில் அமிலத் தன்மை அதிகரிப்பு, குடலில் பூச்சிகள் இருத்தல், சிறு மூத்திரப் பைகள் உருவாகுதல் போன்றவை காரணமாக அமைந்து விடுகின்றன. ஏதாவது ஒரு வகையில் குழந்தை பயத்துடன் இருத்தல், ஆசிரியர்கள்- பெற்றோர்களிடம் ஏற்படும் அச்சம், மனதில் உண்டாகும் பீதி, வருத்தம், ஏமாற்றம் போன்றவை சிறுநீர் கழிப்புக்கான மனரீதியான காரணங்கள்.

டைப் 1 சர்க்கரை நோய் இருக்கும் குழந்தைகளுக்கும், அதிக வெட்கமும் கூச்சச் சுபாவமும் உள்ள குழந்தைகளுக்கும், கவனக்குறைவாகவும் பரபரப்பாகவும் இருக்கிற குழந்தைகளுக்கும் (Attention Deficit Hyperactivity Disease – ADHD) இந்தப் பிரச்சினை ஏற்படுவது சகஜம்.

பொதுவாக 6 வயதாகும் வரையில் எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. தானாகவே குணமாகிவிடும். ஆனால் அதற்கு மேலும் அலட்சியம் காட்டினால் பிற்காலத்தில் ஏதேனும் ஒரு தொல்லையாக இது மாறக்கூடும்.

அதன் பின் பலவிதமான முயற்சிகள் மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டு வருகின்றன. படுக்கைக்குப் போகு முன் குழந்தையை சிறுநீர் கழிக்கச் செய்தல், படுக்கப் போவதற்கு முன்னதான 2 – 3 மணி நேரத்திற்குள் நீராகாரம் அருந்துவதைக் கட்டுப்படுத்தல், சிறுநீர் கழித்த, கழியாத தினங்கள் பற்றிய அட்டவணையைப் பேணுவது,

இது அவர்களது தவறு இல்லை என்றும் நாளடைவில் சரியாகிவிடும் என்றும் நம்பிக்கையூடுங்கள்.

ஆனால், அண்மையில் செய்யப்பட்ட ஆய்வானது தூங்கிய இரு மணி நேரத்தில் குழந்தையை எழுப்பி, கழிவறைக்குக் கூட்டிச் சென்று சிறுநீர் கழிக்க வைப்பது மட்டுமே போதுமானது என்கிறது.

கடிகாரத்தில் அல்லது செல்போனில் இரண்டு மணி நேரத்தில் அலாரம் வைத்துக் குழந்தையை எழுப்பிச் சிறுநீர் கழிக்கச் செய்வதை வழக்கப்படுத்த வேண்டும். அல்லது இந்த நேரத்தில் பெற்றோர் கழிவறைக்குக் கூட்டிச் சென்று சிறுநீர் கழிக்க வைக்கவேண்டும், அந்த நேரத்தில் அதட்டி, மிரட்டி அழைத்துச் செல்லக் கூடாது. வரவில்லை என்று குழந்தை கூறினால், பின்னர் வற்புறுத்தக்கூடாது.

ஆம். இது இயல்பான பிரச்சினை. அவர்கள் வேண்டுமென்று செய்வதில்லை. அவர்கள் முதிர்ச்சியடையப் பிந்துவதால் ஏற்படுகிறது. தானாகவே மாறும். அவர்களைத் தண்டிக்காதீர்கள். ஆதரவோடு நடத்துங்கள். ஆனால், அன்போடு நடத்துவதாக எண்ணி தாழ்வு மனப்பான்மையையும் குற்ற உணர்வையும் தூண்டாதீர்கள்