Home பாலியல் புகை பிடிப்பதை விட உடலுறவு கொள்ளவது நன்மையே

புகை பிடிப்பதை விட உடலுறவு கொள்ளவது நன்மையே

244

பாலியல் செய்திகள்:புகை பிடிப்பவர்களை கலங்கடிக்கும் வகையில் அதிர்ச்சி தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.

“புகைபிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்”, “புகைபிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்” என்று பல வசனங்கள் புகைபிடிப்தை தடுப்பதற்கு வைத்திருந்தாலும் பார்க்க வேண்டியவர்கள் அதை கவனிப்பதில்லை.

நம் நாட்டில் புகைப் பழக்கத்தால் இறந்தவர்களின் இறப்பு எண்ணில் அடங்காது. மனிதனுடைய நுரையீரலை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும், இது புகைபிடிப்பவற்கும் தெரியும். தெரிந்து என்ன பயன் அதை எவரும் நிறுத்தி கொள்வதில்லை.

தற்போது நடத்திய ஆராய்ச்சியில் 18-ல் இருந்து 76 வயது வரை இருப்பவர்களில் 57 சதவீதம் பேர் மட்டுமே புகைப்பழக்கம் இல்லாதவர்கள் மீதமுள்ள 43 சதவீதம் புகைப்பிடிப்பவர்களே.

இந்த ஆராய்ச்சியில் சுவாரஸ்யமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 70 சதவீத பெண்கள் புகைபிடிக்கும் ஆண்களை வெறுக்கின்றனர். மேலும் 56 சதவீத பெண்கள் புகைப்பழக்கம் உள்ளவரிடம் உறவு வைத்து கொள்வதில் தயங்குகிறார்கள்.

இந்த ஆராய்ச்சி ஆண்களின் எண்ணத்தை மாற்றியுள்ளது. புகைபிடிப்பது பெண்களுக்கு பிடிக்கும் அது ஒரு விதமான ஈர்ப்பு என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த ஆராய்ச்சி அதை பொய் என்று நிருபித்துள்ளது. காரணம் பெண்கள் சிகரெட் வாடையை வெறுக்கின்றனர். அதை பிடித்து முடித்து தன் காதலன் அருகில் வந்தால் மூக்கை மூடி கொள்கிறார்கள். இதனால் பேசுவது கூட இருவருக்கும் இடையே குறைந்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் இப்பழக்கம் உயிருக்கு கேடு விளைவிக்கும். இதனால் உயிருக்கு ஆபத்து நேரும் என்றும் பெண்கள் கூறுகிறார்கள்.

புகை பிடித்துவிட்டு தன் காதலன் அருகில் வந்தால் வாயில் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் இதை எல்லாம் காதலி வெறுக்கிறாள், ஆசையாக பேசுவதில் கூட தடை வருகிறது என்ற வருத்தம் எழுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மனகசப்பு உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

வேப்பிங் என்ற எலக்ட்ரானிக் சிகரெட் மூலமாக தான் விரும்புவர்களை ஈர்த்து விடலாம் என்று நினைகின்றனர் பலர். எப்படிபட்டதாக இருந்தாலும் இரண்டுமே சிகரெட் தான், உடலை பாதிக்கக்கூடிய ஒன்று தான் அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

தொழில்நுட்பம் வளர வளர புதுவிதமாக கண்டுபிடிப்பது இயல்பு ஆனால் அதன் விளைவு நம் உடலை பாதிக்கும் விஷயமாக உள்ளது. எவ்வித சிகரெட் ஆக இருந்தாலும், அது தங்களின் உறவை தான் பாதிக்கிறது. இதை விட வேறு காரணம் கிடைக்க வேண்டுமா புகைபழக்கத்தை விடுவதற்கு. உறவுகளை விட புகைப்பழக்கம் மேலானது அல்ல