Home இரகசியகேள்வி-பதில் மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலமா?

மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலமா?

252

பெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?

ஆம்பளைஸுக்கு எல்லாமே ஈசிதான். பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விட்டுப் போய் விடுவார்கள் – அக்கம்பக்கம், இங்கிதம், சூழ்நிலை, வெட்கம் இதெல்லாம் ரொம்பப் பார்ப்பதில்லை.

ஆனால் பெண்கள் அப்படியில்லை. எதையுமே படாரென்று கேட்டு விடவோ, பேசவோ அவர்களுக்குப் பிடிக்காது. பெரும்பாலும் தாங்கள் மனதில் நினைப்பதை குறிப்பால் உணர்த்துவார்கள்.

உறவுக்குப் போகலாம் என்பதைக் கூட கணவரிடம் பளிச்சென கூறுவதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை, பெரும்பாலும் செய்வதில்லை. அதற்கும் சில பரிபாஷைகளை வைத்திருப்பார்கள். மறைமுகமாகத்தான் சொல்வார்கள். அதைப் புரிந்து கொண்டு வீட்டுக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அதேசமயம், பெண்களின் உடல் ரீதியான சில மாற்றங்களை வைத்து அவர்கள் செக்ஸ் உறவுக்குத் தயாராக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியுமாம். அதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் அவங்க கேட்காமலேயே நீங்களாக காரியத்தில் இறங்கி அவர்களை அசரடிக்க முடியும்…

உறவுக்கான மூட் அல்லது செக்ஸ் உணர்வுகள் எழுச்சியுற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதைக் கட்டுப்படுத்துவதிலேயே முக்கியக் கவனம் இருக்கும். அப்படிப்பட்ட பெண்களின் கைகளைப் பார்த்தால் அதை படு இறுக்கமாக உடம்போடு ஒட்டி வைத்துக் கொள்ள கொள்ள முயல்வதைக் காணலாம். லூசாக கைகளை விட மாட்டார்கள். கைகளை மார்புகளுக்கு குறுக்காக கட்டியபடியோ அல்லது உடம்போடு ஒட்டியபடியோ இருக்க முயற்சிப்பார்கள். அப்படிச் செய்வதன் மூலம் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

இன்னொரு சிம்ப்டமும் இருக்கிறது. அதாவது உடல் ரீதியாக உணர்ச்சிவசப்படும் போது, மூச்சு விடுவது வேகமாகும். அதாவது வழக்கத்தை விட வேகமாக மூச்சு விடுவார்கள். காற்றை உள்ளிழுப்பதும், வெளி விடுவதும் வழக்கத்தை விட வேகமாக இருக்கும் என்பதால் மார்புகள் வழக்கத்தை விட வேகமாக எழுந்து அடங்குவதைக் காண முடியும்.

இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும். ஆர்கஸத்தை நோக்கி உடல் வேகமாக உந்தும் என்பதால் உடல் உறுப்புகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுவதே இந்த வேகமான மூச்சு விடுதலுக்கு முக்கியக் காரணம். இந்த அறிகுறியை உணர்ந்தால் உங்கள் மனைவி உறவுக்கான நல்ல மூடில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதற்காக வேகமாக மூச்சு விடும்போதெல்லாம் ‘அதற்குத்தான்’ என்று தப்பாக கணக்கிட்டு விடக் கூடாது… வேறு காரணமும் இருக்கலாம்.

இப்படி சின்னச் சின்னதாக பல அறிகுறிகள் தென்படும். இருப்பினும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு மாதிரி இருக்கலாம். எனவே தப்புக் கணக்குப் போடாமல் சரியாகக் கணித்து களத்தில் இறங்குவது உத்தமம்.

காமக் கலைகள் கற்றுத் தெரிந்து கொள்வதல்ல… அனுபவம்தான் நல்ல ஆசான். எனவே உரிய முறையில் உணர்ந்து, தெரிந்து, தெளிந்து, மகிழ்ச்சிக் கடலில் குதிங்க…!

————————————
மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலமா?

கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாம் என்று கூறுகிறான். அப்படி ஈடுபடுவது சரியா? அவன் கூறுவது உண்மையா?

பதில்: உங்கள் நண்பர் கூறுவது சுத்தப் பொய்! மது அருந்தும்போது உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே தூண்டப்படும். ஆனால், உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாது.

மேலும் தொடர்ந்து மது அருந்தினால் ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்ட்ரான் உருமாறி பெண்பால் ஹார்மோனான ஈஸ்டராய்டுகளாகி விடுகிறது.

இதனால் தான் மது போதையில் மூழ்கிய ஆண்களுக்குத் தோல் மென்மையாகிவிடுகிறது. தசை போட்டுவிடுகிறது. பெண்ணைப் போல மார்பகங்கள் உருவாகிவிடுகின்றன. முகத்திலும் பிறப்புறுப்பிலும் ரோமங்கள் குறைந்துவிடுகின்றன.

இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஆபத்தாக விந்தணுக்களின் எண்ணிக்கையும் டெஸ்டோஸ்ட்ரானின் உற்பத்தியும் ரொம்பவும் குறைந்து ஒரு கட்டத்தில் ஆண்மையே பறி போய்விடுகிது. ஆக, மது ஆண்மைக்கு உலை வைக்கிறதே தவிர உச்சக்கட்டத்தை நீட்டிப்பதில்லை.
——————————-

உடலுறவில் ஈடுபட்டால் உடல் பலவீனம் ஆகுமா?

பொதுவாக ஆண்களிடையே செக்ஸ் பற்றிய ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. அதாவது உடலுறவில் அதிகமாக ஈடுபட்டால் உடல் நிலை பாதிக்கப்படும் என்பது தான் அது. சித்த மருத்துவத்தில் அது நியாயமாக்கப்பட்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஆனால் ஆங்கில மருத்துவம் அதை அப்படியே நிராகரிக்கிறது. உடலுறவில் ஈடுபடுவதற்கும், உடல் நலம் கெட்டுப்போவதற்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது என அது ஆணித்தரமாகக் கூறுகிறது. சரி…

மேலும் இது பற்றி பாலியல் நிபுணரின் கருத்து

உடலுறவில் ஈடுபடுவதால் நிச்சயமாகப் உடல் பலவீனம் அடைந்து விட மாட்டோம். நாம் வெளியேற்றும் விந்தில் 15 அல்லது 20 கலோரிகள் மட்டுமே ஆகும். இதில் கொஞ்சம் புரதம், கொஞ்சம் வைட்டமின், கொஞ்சம் தாது உப்புக்கள் கலந்துள்ளன நாம் சிறுநீர் கழிக்கும் போது வெளியேறும் புரதம், வைட்டமின் சமாச்சாரங்களை விட இது மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் 10 அடி தூரம் நடந்தால் எவ்வளவு சக்தி செலவாகுமோ அவ்வளவு சக்தி தான் நாம் ஒரு முறை வெளியேற்றும் விந்தில் உள்ள சக்தி.

ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்திற்குச் சமம், விந்தை வெளியேற்றாமல் சேமித்து வைத்தால் தெய்வீகத் தன்மை அடைய முடியும் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள். உடலுறவு ஒரு சந்தோஷமான அனுபவம். நிறைவு தரும் நிகழ்வு. இதில் பலவீனம் அடைந்து விடுவோமாம் என்ற பயம் வேண்டாம்.