Home பாலியல் உங்களுக்கு இது இருந்தால் நீங்களும் ஒரு பாலியல் அடிமையே

உங்களுக்கு இது இருந்தால் நீங்களும் ஒரு பாலியல் அடிமையே

394

அந்தரங்க அடிமைத்தனம்:மனிதர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருப்பார்கள்; சிலருக்கு உடலுறவு என்றால் அருவருப்பாக இருக்கும்; சிலருக்கோ உடலுறவு என்றால் சொர்க்கமாக இருக்கும். மனிதர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் விதம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்; நாம் இந்த பதிப்பில் ஒருவர் உடலுறவுக்கு அடிமையாகி விட்டார் என்பதை எந்தெந்த விஷயங்களைக் கொண்டு அறிந்து கொள்வது என்பது குறித்து பார்க்கப் போகிறோம்! வாருங்கள் பதிப்பிற்குள் செல்லலாம்.

சுய இன்பம்
உடலுறவிற்கு அடிமையாகிவிட்ட ஒருவரால் சுய இன்பம் காணாமல் இருக்க இயலாது; எந்நேரமும் சுய இன்பம் காண வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

எண்ணங்கள்
உடலுறவுக்கு அடிமையாகிவிட்ட ஒருவருக்கு மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தும் உடலுறவு குறித்ததாக, அது தொடர்பான சிந்தனைகளாகவே இருக்கும்.

ஆன்லைன் செக்ஸ்..!
இவ்வாறு அடிமையானவர்கள், ஆன்லைனில் எந்நேரமும் உடலுறவு தொடர்பான தகவல்களை, படங்களை, காணொளிகளை, சமூக வலைதள உடலுறவு பக்கங்களில் நேரம் கழிப்பதையே எப்போதும் செய்து கொண்டிருப்பர்.

பல துணைகள்
இந்த செக்ஸ் அடிமைகள் மனைவியைத் தவிர்த்து, தவிக்கவிட்டு விட்டு பல விலை மாதுக்களை தேடி ஒவ்வொரு நாளும் செல்லத் தொடங்குவர்.

பிரிந்த நிலை
தன் மனைவியுடன் உடலுறவு கொண்டாலும், அவர்கள் மீது காதல் இருக்காது; பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கைக்கு எடுத்துச் செல்ல மனம் திட்டமிடும். இந்த நிலையில் அவர்கள் மனம் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்காமல், ஒருவித வெற்றிடம், உணர்வுபூர்வமாக பிரிந்த நிலை ஏற்படும்.

உரையாடல்கள்
நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாரிடம் பேசினாலும் அங்கு சுற்றி, இங்கு சுற்றி, செக்ஸ் குறித்த உரையாடல்களை கொள்ளத் தொடங்கி விடுவர்.

பாலியல் கொடுமை
இந்த அடிமை வியாதி முற்றி போய் விட்டால், பாலியல் கொடுமைகளை கூட இவர்கள் துணிந்து விடுவார்கள்.

பண்பாட்டை மீறுவது
தனக்கென, தன் குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கென உள்ள பண்பாடுகளை மீறி, மிகவும் கேவலமாக நடந்து கொள்ளத் தொடங்குவர்.

தேவை தெரியாது
இவர்களுக்கு உடலுறவு மட்டுமே வாழ்க்கை என்றாகி, அன்றாட தேவைகளை, கடமைகளை கூட மறக்கத் தொடங்கி விடுவர்.

6 மாத காலம்
ஒருவர், தொடர்ச்சியாக 6 மாத காலம், இதே போன்று உடலுறவு நடைமுறை, செயல்முறைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தால், அவர் நிச்சயமாக உடலுறவுக்கு அடிமையாகிவிட்டார் என்பதே பொருள்.