நீங்கள் உடலுறவு கொள்ளும் முன்னே இருமல் மருந்தை குடித்து செல்வதனால் ஆண் விந்துக்கள் ஈர்க்கப்படுவதாக அறிவியல் பூர்வமாக சொல்லப்படுகிறது. இது உண்மை தானா? வாருங்கள் பார்க்கலாம்.
உண்மை தானா?
பொதுவாக நாம் குடிக்கும் இருமல், சளி மருந்துகளில் குவாய்பெனிசின் எனும் உட்பொருள் காணப்படுகிறது. இது நுரையீரலில் காணப்படும் சளியை இலக செய்கிறது. அது போலவே செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு முன்பு இருமல் மருந்து எடுத்துக்கொள்வதால் ஆண்களின் விந்தணுக்கள் ஈர்க்கப்பட்டு விரைவில் கருத்தரிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
என்ன செய்யும்?
இந்த இருமல் மருந்து உங்கள் உடலுக்குள் செல்ல கர்ப்பப்பை சளியை ஏற்படுத்துகிறது. இதனால் விந்துக்கள் மிக எளிதில் முட்டைக்கு இடம்பெயர்ந்து செல்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பரிந்துரை செய்து அதன்பிறகு ஒரு முடிவை எடுப்பது நல்லது. இதற்கு காரணம் எல்லா இருமல் மருந்தும் ஒரே அளவிலான கெமிக்கலை கொண்டிருக்கும் என நம்மால் சொல்ல இயலாது. எனவே, உடலுறவு கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். ஏனென்றால், இருமல் மருந்து உடலில் சுரக்கும் ஒட்டுமொத்த சளி சவ்விலும் புகுந்து சளியை வற்ற செய்துவிடும். இதனால் நீங்கள் நினைத்ததற்கு மாறான எதிர்வினைகளும் ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு செயல்படலாம்.
அதேபோல் மருத்துவரின் பரிந்துரைக்கு இணங்க எடுத்துக்கொள்ளும் அளவும் இருத்தல் வேண்டும். இல்லையேல் இதனாலும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.
இருமல் மருந்து கர்ப்பத்தை உறுதி செய்கிறது என்பதை நம்ப முடியாமல் போனாலும், உங்கள் உடலில் இருக்கும் கர்ப்பப்பை சளியை அதிகரிக்க இருமல் மருந்து உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அண்டவிடுப்புக்காக மட்டுமே நீங்கள் குடிக்க வேண்டுமே தவிர, அதிக அளவில் எடுத்துக்கொள்ள முயலக்கூடாது. வீட்டில் இருந்தே கருத்தரிக்க முயல்வது எவ்வளவு தான் உண்மையை அரங்கேற்றினாலும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இருப்பதில்லை. ஆனால், குவாய்பெனிசின் இருமல் மருந்தில் காணப்படுவதால் கர்ப்பத்திற்கு உதவ, விந்தணுக்களுக்கும் கைக்கொடுக்கிறது.