சிலருக்கு அதிகமாக கருவளையம் இருக்கும் போது முகத்தின் அழகே கெடுத்துவிடும். இதற்கு காரணம் நம்முடைய சில பழக்கவழக்கங்கள் தான்.
கண்களுக்கு கீழ் உள்ள தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஊட்டச்சத்து குறைவான உணவுகளை உண்பதுகூட கருவளையத்தை உண்டாக்கும்.
தோலை வெளிரச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச்சத்தும் உள்ள உணவு பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் கருவளையம் நாளடைவில் மறைந்துவிடும்.
முன்றாவது காரணம் கண்களுக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரும்.
அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி பார்ப்பதோ கம்யூட்டர் முன் உட்கார்ந்திருப்பதோ கூட காரணமாக இருக்கலாம்.
அனீமியா மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவை இருந்தாலும் கருவளையமானது உண்டாகும்.
மன அழுத்தமானது அதிகம் காணப்பட்டால் கண்களைச் சுற்றி கருவளையம் வரும்.
ஃபேர்னஸ் க்ரீம்கள் பயன்படுத்தினால் முகம் அழகாகவும் கலராகவும் மாறிவிடும் என்று நினைத்துப் பயன்படுத்துகிறோம். ஆனால் நம்முடைய கண்களுக்கு கீழ் கருவளையம் வருவதற்குக் காரணமும் அந்த ஃபேர்னல் க்ரீம்களும் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.