Home பெண்கள் அழகு குறிப்பு கைகளை அழகாக வைத்துக்கொள்ள சில குறிப்புக்கள் இதோ..!

கைகளை அழகாக வைத்துக்கொள்ள சில குறிப்புக்கள் இதோ..!

26

பெண்களுக்கு அழகாக இருப்பது முக்கியம், சிறுமிகளின் இருந்து பெரியவர்கள் வரை அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அழகிற்காக பல வகையில் பணத்தை வீண்ணடிப்பார்கள். அழகு நிலையங்களிலே குடியிருக்கும் பெண்களும் உண்டு. முகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் கை, கால்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் பெண்கள் தான் அதிகம். கைகள் சொரசொரப்பாக இருந்தால், சர்க்கரையுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் குழைத்து உள்ளங்கைகளில் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.

கைகளை அழகாக வைத்துக்கொள்ள சில குறிப்புக்கள் இதோ..!

பாலேட்டையும், கோழி முட்டையின் வெண்கருவையும் கலந்து இரவில் கைகளிலும், கை விரல்களிலும் பூசிவைத்திருந்து காலையில் பச்சைப்பயிற்றம் மாவைப் போட்டு தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தடவி வந்தால் கைகளும், கை விரல்களும் நல்ல பென்னிறமாக மாறும்.

மேலும், மருதோன்றி இலையை எடுத்து சோற்று கற்றாழையுடன் சேர்த்து அரைத்து பற்றுபோட்டு வந்தால் உள்ளங்கையில் ஏற்படும் எரிச்சல் குறையும். அதைத்தொடர்ந்து, ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து நான்கு (அ) ஐந்து சொட்டுக்கள் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக் கைகளுக்கு தேய்த்து கழுவினால் உள்ளங்கை மிருதுவாக மாறும்.