அழகு என்பது தற்காலிகமானது. அதை மூலதனமாக எண்ணி, கவர்ந்தோ, ஈர்ப்புக் கொண்டோ நீங்கள் ஓர் உறவில் இணைந்தால். அழகை போலவே அந்த உறவும் தற்காலிகமாக தான் நிலைக்குமே தவிர, நிரந்தரமாக அல்ல. பொதுவாக ஆண்கள் பெண்களிடம் அழகை மட்டும் தான் எதிர்பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
ஆனால், அழகையும் தாண்டி, ஆண்கள் பெண்களிடம் ஏழு விஷயங்களை அதிகமாக எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர். அது என்னென்ன, ஏன் அந்த ஏழு விஷயங்களை ஆண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என இனிக் காண்போம்….
உயிரிலே கலந்தது
உறவு என்பது படுக்கையில் மட்டும் கட்டியணைத்து கொள்வது அல்ல. உயிரோடு இணைந்திருக்க வேண்டும். உடலோடு மட்டுமின்றி, உயிரிலும் பிணைப்பு ஏற்பட வேண்டும்.
அரவணைப்பு
தவறுகளை பொறுத்துக் கொண்டு, தோல்வியில் தேற்றிவிட, அழுகையை துடைக்க, புன்னகையை அதிகரிக்க நல்ல துணையாக திகழ வேண்டும்.
கனிந்த இதயம்
சுயநலம் இன்றி, பணம், அந்தஸ்தை மட்டும் காணாமல், கனிந்த இதயத்துடன், காதலும், அன்பும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அளிக்கும் நபராக இருக்க வேண்டும்.
கேட்க வேண்டும்
பெரும்பாலும் பெண்களை பற்றி ஆண்கள் கூறும் குறை தான் இது. சொல்வதை கேட்பதில்லை என்பதல்லை, காது கொடுத்தே கேட்பதில்லை என்பது தான். எனவே, தாங்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கும் நபராக இருக்க வேண்டுமாம்.
பிணைப்பு
அனுதாபம் காட்ட வேண்டும். அட போனா போகட்டும் பொறுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் பிறக்க வேண்டும். அனைவரும் எல்லா தருணத்திலும் சிறந்து விளங்க மாட்டார்கள். எனவே, தவறுகள் செய்யும் போது போனால் போகட்டும் என அனுதாபம் காட்டலாம்.
உணர்வலைகள்
இருவரின் உணர்வலைகளும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அப்போது தான் இல்லறமும், உறவும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியும். இல்லையேல் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு போய், உறவு கந்தலாகி போய்விடும்.
சண்டை கோழி
சண்டை என்பது கட்டாயம் நிகழும். ஆனால், அந்த சண்டையை வளர்க்கும் நபராக இருக்காமல், தீர்வுக் காண தெரிந்திருக்கும் நபராக இருக்க வேண்டும்.