பெண்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்களோ இல்லையோ, தங்களின் அழகில் தனிக்கவனம் செலுத்துவார்கள்.
அதுவும் சருமம் வெள்ளையாக இருக்கவேண்டும், கூடவே பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று அனைத்துவிதமான பேஷியல், மேக்கப் என எதையும் விட்டுவைக்கமாட்டார்கள்.
இதோ சருமம் பளபளப்பாக இருப்பதற்கான டிப்ஸ்!
பன்னீர் ரோஜாவின் இதழ்களுடன், வேப்பிலை சேர்த்து அரைக்கவும். அத்துடன் சில துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, கண்களுக்கு மேல் பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.
இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து, உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் இயற்கையான நிறம் பெறுவதுடன், பளபளப்பாகவும் மாறும்.
ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு காய வைத்த சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.
ஒரு கப் மல்லிகைப்பூவுடன் 4 லவங்கம் சேர்த்து அரைக்கவும். அதில் சுத்தமான சந்தனம் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டுக் குழைக்கவும். இதை முகம், நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரால் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை, சின்னச் சின்ன கட்டிகள் சரியாகி சருமம் ஒரே சீரான நிறத்துக்குத் திரும்பும்.