உலகில் அழகாக இருக்க வேண்டுமென்று நினைக்காதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் நம்மில் பெரும்பாலானோரிடம் நிறம் பற்றிய கவலை இருக்கத்தான் செய்கிறது. அதிலும் கருப்பாக இருக்கும் பெண்களுக்கு தங்களுடைய சரும நிறம் பற்றிய கவலை மிக அதிகம்.
கருப்பாக இருப்பதற்கு முதன்மையான காரணம் உடலில் இருக்கும் மெலனின் அளவு அதிகமாக இருப்பது தான்.
சருமம் பளிச்சிட வேண்டுடென்று நினைப்பவர்கள் கண்ட கண்ட க்ரீம்களையும் உபயோகிக்காமல் இயற்கையாக நமக்குக் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டே நம்முடைய சருமத்தின் நிறத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
பாதாம், பால், தேன் போன்றவை சருமத்துக்கேற்ற சிறந்த அழகு சாதனப் பொருள்களாகும். அதனால் 4 பாதாம் பருப்பை எடுத்து சிறிது நேரம் ஊறவைத்து பேஸ்ட் செய்து அதோடு சில துளிகள் பாலும் தேனும் சேர்த்து கலந்து முகம், கை, கால் மற்றும் சருமங்களில் தடவி, 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவிவர முகம் பளபளக்கும்.
2 அல்லது 3 டீஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தி்ல நன்கு ஊறவைத்துக் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகளும் நீங்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் வெகு விரைவில் மறைந்து முகம் பளிச்சென காட்சியளிக்கும்.
நிறத்தைக் கூட்டுவதற்கு சந்தனம் மிகச் சிறந்த பொருள். சந்தனப்பவுடரை குழைத்து முகத்தில் அப்ளை செய்யலாம். சந்தனப் பவுடரோடு சில துளிகள் தேன் மற்றும் பால் சேர்த்துக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து 25 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். இதை தினந்தோறும் செய்து வந்தால் மிக விரைவிலேயே சருமம் சிவந்த நிறத்துக்கு வந்துவிடும்.
கொக்கோ பட்டரை முகத்துக்கு அப்ளை செய்து வந்தால் அது சருமத்தின் மெலனின் அளவை சீராக வைத்திருக்கும். கொக்கோ பட்டர் சருமத்தின் ரத்த ஓட்டத்தின் அளவையும் சீராக வைத்திருக்கும். முகத்தில் கருமை உள்ள இடத்தில் தினமும் தடவி வர, சருமத்தின் நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.