Home ஆரோக்கியம் அதிகபடியான வாய் துர்நாற்றத்தை போக்க செய்யவேண்டியது

அதிகபடியான வாய் துர்நாற்றத்தை போக்க செய்யவேண்டியது

207

மருத்துவ தகவல்:துர்நாற்றத்தைத் தடுக்க என்னதான் இரவில் பற்களை துலக்கிவிட்டு படுத்தாலும் காலையில் வாய்நாற்றம் போன பாடில்லை. 90% மக்களின் வாய் காலையில் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும். இதற்கு ஒருசில காரணங்கள் உண்டு.

அதில் உண்ணும் உணவுகள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள், ஏன் சுத்தமில்லாமை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

காலையில் ஏன் வாயில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது? தெரிஞ்சுக்க தொடர்ந்து வாசிங்க…

** வாய் வறட்சி

பகலில் அவ்வப்போது தண்ணீர் குடித்து வருவோம். மேலும் எச்சிலின் சுரப்பும் இருக்கும். ஆனால் இரவில் இவை இரண்டுமே இல்லாததால், வாய் நீண்ட நேரம் வறட்சியுடன் இருந்து, துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.

** உணவுத் துகள்கள்

வாயில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற சுரக்கப்படும் எச்சிலின் சுரப்பு இரவில் குறைவாக இருப்பதால், பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டுள்ள உணவுகளை சாப்பிட வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இரவில் வெளிவந்து அதனை சாப்பிட்டு, ஆங்காங்கு ஓடியாடி சந்தோஷமாக விளையாடுவதால், துர்நாற்றம் வீசுகிறது.

** புகைப்பிடித்தல் மற்றும் சாராயம் குடித்தல்

புகைப்பிடிக்கும் பழக்கமோ அல்லது மது அருந்தும் பழக்கமோ இருந்தால், அவை வாயின் ஆரோக்கியத்தை கெடுத்து, எந்நேரமும் வாய் துர்நாற்றத்துடன் இருக்குமாறு செய்யும்.

** ஆரோக்கியமின்மை

உடலில் பிரச்சனை இருந்தால், அதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, காய்ச்சல் இருந்தால், சிறுநீரகத்தில் பிரச்சனை ஏதேனும் இருந்தால், வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே அவ்வப்போது உடலை பரிசோதித்து, பிரச்சனை இருந்தால் உடனே கவனித்து போதிய சிகிச்சை எடுத்து வாருங்கள்.

** குறட்டை

குறட்டைக்கும், வாய் துர்நாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது. குறட்டை விடும்போது வாய் திறந்தவாறு இருப்பதால், வாய் வறட்சியடைந்து, அதனால் வாய் துர்நாற்றம் வீசுகிறது.