பாலியல் செய்திகள்:செக்ஸ் மீதான ஆசையும், அது பற்றிய அறிவும் மட்டும் இருந்தால் போதாது. அதில் ஈடுபட ஆரோக்கியமாக உடலை வைத்திருப்பது அவசியம் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.
சமீபத்திய உலக அளவிலான ஆன்லைன் சர்வே ‘செக்ஸில் ஈடுபடும் போது மூன்றில் ஒரு பங்கு மக்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்’ எனச் சொல்கிறது. கடின உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறையே பெரும்பாலானவர்களுக்கு முதுகுவலி வர காரணமாக அமைகிறது. பிரிட்டிஷ் மருத்துவ இதழ் 58 சதவிகித மக்களுக்கு உடலுறவின் போது ஒரு முறையாவது முதுகு வலியோ, இடுப்புப் பகுதியில் வலியோ ஏற்படுகிறது என அறிவித்து இருக்கிறது.
முதுகுத் தசைகளில் ஏற்படும் அழுத்தமும், தசைநார்கள் பலவீனமடைவதும் 80 முதல் 90 சதவிகிதம் முதுகுவலிக்கு அடிப்படை காரணம். இதனால் முதுகு தண்டுவடத்தினுள் பிரச்சனைகள் எதுவுமிருக்காது. அதனால் கவலைப்படத் தேவையில்லை. முதுகுத் தசைகளை வலுப்படுத்தினால் போதுமானது. முதுகுத் தசைகளை நல்ல நிலையில் வைக்கும் வார்ம்-அப் உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.
ஒரு பிசியோதெரபிஸ்டின் ஆலோசனையின் படி முதுகு தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டால் இன்னும் நல்லது. முதுகுதசைகள் வலுவாக இருந்தாலே முதுகு தண்டுவடத்தை சரியான இடத்தில் நிறுத்தி அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். Core muscles என ஆங்கிலத்தில் குறிப்பிடும் முதுகு, இடுப்பு, வயிற்றின் முக்கிய தசைகளை வலுவாக்க வேண்டும். இதன் மூலம் உடலுறவில் எந்த வலியும் இல்லாமல் சிறந்த முறையில் ஈடுபட முடியும்.
ஒருவருக்கு குறிப்பிட்ட நிலையில் உடலுறவு கொள்ளும் போது முதுகு வலி வருகிறது எனில், அந்த நிலையை தவிர்த்து விட வேண்டும். முதுகு வலியை ஏற்படுத்தாத நிலைகளில் மட்டுமே செக்ஸில் ஈடுபட வேண்டும். தீவிரமாக இயங்காமல் கொஞ்சம் மெதுவாக இயங்கினால் நீடித்த இன்பம் பெறலாம். படுக்கையானது கடினமான மெத்தையால் அமைந்திருக்க வேண்டும்.
படுத்தவுடன் உள்ளே அமுங்கும் மெது மெத்தைகளை பயன்படுத்தினால் முதுகுவலிக்கான வாய்ப்பை அதிகமாக்கும். உடலுறவின் போது மூட்டுவலி வராமல் இருக்க மூட்டுகளுக்கு அடியில் தலையணை வைத்து இயங்க வேண்டும். முதுகில் அதிக அழுத்தம் கொடுக்காமல் இயங்க பழகிக்கொள்ள வேண்டும். யோகா, பிசியோதெரபி பயிற்சி எடுத்து முதுகை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே உங்கள் செக்ஸ் வாழ்க்கையும் நலமுடன் இருக்கும்.