Home பெண்கள் தாய்மை நலம் பாப்பா கிடைச்ச உடனயே செக்ஸ் வைச்சுக்காதீங்க..!!

பாப்பா கிடைச்ச உடனயே செக்ஸ் வைச்சுக்காதீங்க..!!

321

புதிதாய் திருமணமானவர்களுக்கு பெற்றோர் புரமோஷன் கிடைத்து விட்டால் சந்தோசம்தான். அப்புறம் அவர்களின் கதி அதோ கதிதான் ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று கூறி பத்து மாதங்கள் பட்டினி கிடக்க வைத்து விடுவார்கள். இதில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முழித்துக்கொண்டிருப்பவர்கள் ஆண்கள்தான். எப்படா குழந்தை பிறக்கும் என்று காத்திருந்து குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே உறவுக்காக மனைவியை கட்டாயப்படுத்துவர்களும் உண்டு. அவர்களுக்காகத்தான் இந்த கட்டுரை. குழந்தை பிறந்த சில வாரங்களில் தாம்பத்ய உறவு கொண்டால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
பேறு காலம் முடிந்த உடன் பிறந்த குழந்தையை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும். குழந்தையை அருகில் படுக்கவைத்துக்கொண்டு தம்பதியர் உறவில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைக்கு தொற்றுநோய் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
குழந்தை பிறந்த சில வாரங்களில் உறவில் ஈடுபடுபவர்கள் நீண்ட நேரத்தை செலவழிக்க கூடாதாம். இதனால் தேவையற்ற சக்தி வீணாகுமாம்.
குழந்தை பேறினால் மனைவிக்கு உறுப்பில் காயங்கள் ஏற்பட்டிருக்கும். எனவே காயம் ஆறுவதற்கு முன்பாக உறவில் ஈடுபடுவதால் நோய் தொற்று ஏற்படுமாம்.
பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதற்காக மார்புகளில் தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்திருக்கும். எனவே அவசர உறவு மார்பகங்களில் காயங்களையும், பாதிப்பினையும் ஏற்படுத்தும் என்கின்றனர். இதனால் பிறந்த குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படுமாம்.
குழந்தை பிறப்பிற்கு முந்தைய சில மாதங்கள் வரை தம்பதியர் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் பிறப்புறுப்புக்களின் மூலம் நோய் தொற்று எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான். அதுபோல குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை தம்பதியர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதை தள்ளிப்போடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.