Home குழந்தை நலம் குழந்தைகளின் முகம் சொல்லும் அர்த்தங்களின் தாயின் எதிர்வினைகள்

குழந்தைகளின் முகம் சொல்லும் அர்த்தங்களின் தாயின் எதிர்வினைகள்

54

குழந்தை நலம்:உங்கள் குழந்தையை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று நாங்கள் அறிவோம் அதை இன்னும் சற்று கூடுதல் சிறப்பாக்கலாம். உங்கள் குழந்தையை தற்செயலாய் தொடும்போது அவர்கள் தரும் அழகான முகபாவனைகளை கவனித்திருப்பீர்கள். அதை திரும்ப செய்யும் பொது அவர்கள் அந்த முகபாவனையை பெறமுடியவில்லையா? எங்களிடம் அதற்கு தீர்வு உள்ளது. குழந்தையின் குழந்தைபருவ காலத்தின்போது தோன்றும் மற்றும் காணாமல் போகும் குழந்தையின் “முதன்மை எதிர்வினைகள்” இதுவாகும். எனவே, உலகத்தை உங்கள் குழந்தையின் மீது கொஞ்சம் கொஞ்சமாக மயக்க வைக்கும் விதத்தை நீங்கள் எப்படிக் காணலாம்.

1 கட்டைவிரலை உயர்த்துதல்
குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு பாதி சாய்ந்து இருக்கும்படி பிடித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் குழந்தை தொடர்ச்சியாக கையை தூக்கிக்கொண்டே இருப்பார்கள். இது அவர்கள் கட்டைவிரலை உயர்த்தி(Thumbs Up ) காட்டுவது போல் இருக்கும். இது குழந்தையின் மோரோ ரிஃப்ளெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரதிபலிப்பு பிறந்தவுடன் ஆரம்பித்து 4 அல்லது 6 மாதத்தில் மறைகிறது.

2 சண்டைக்கு அழைத்தல்
குழந்தைகள் குப்புறப்படுத்திருக்கும் போது அவர்களை ஒருபுறமாக திருப்பும்போது அவர்கள் இன்னொரு கையை உங்களை நோக்கி அடிப்பதுபோல் உயர்த்தி கொண்டுவருவார்கள். இது உங்களை சண்டைக்கு அழைப்பது போல் இருக்கும். இது டோனிக் நெக் ரிஃப்ளெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக 4 அல்லது 6 மாதத்தில் மறைந்துவிடும்.

3 பறக்க செய்தல்
குழந்தையை தூக்கி திடீரென்று கீழே விழுவது செய்தல் அவர்கள் அந்த ஒரு கணத்தில் பறப்பது போல் காட்சியளிப்பார்கள். இது பாரச்சூட் ரிஃப்ளெக்ஸ் என்றழைக்கப்படும். இது குழந்தை நடக்க ஆரம்பிக்கும் முன் மறைந்துவிடும்.

4 முகபாவனை
குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் உங்களது செய்கைகளை திரும்ப செய்து காட்டுவார்கள். குழந்தைகளின் வாயை குவித்து வைத்தால், அவர்கள் அப்படியே வைத்து கொண்டிருப்பது திரும்ப செய்வது போன்றவற்றை செய்வார்கள். அவர்கள் சிலரின் செய்கைகளை பார்த்து அவர்களின் பாவனைகளை வெளிப்படுத்துவார்கள்.

5 இறக்கை
குழந்தை 9 மாதம் மற்றும் ஒரு வயதில் இருக்கும் போது, அவர்களுக்கு கூச்சம் ஏற்படும் பகுதிகளை தொட்டால் மயில் தோகை விரிப்பதை போல் கை மற்றும் கால் விரல்களை விரிப்பார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

குறிப்பு: இந்த செயல்கள் அழகான முகபாவனைகளை உருவாக்கும். இவை உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். ஒருவேளை உங்கள் குழந்தை சரியாக எதிர்வினை செய்யவில்லையெனில் அதில் அதிக கவனம் செலுத்துங்கள்.