Home குழந்தை நலம் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள்..!

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள்..!

44

பெரும்பாலான தாய்மார்களின் பெரிய கவலையாக இருப்பது, தங்கள் குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதும், அவர்கள் சரிவர உண்ணாததும் தான். எனவே, குழந்தைகள் சரியான எடை பெற மற்றும் அவர்களை ஆரோக்கியமாக மாற்ற உதவும் சில வகை உணவுகள் குறித்து இந்த பதிப்பில் கொடுத்துள்ளோம். இப்பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை, குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சமைத்து பரிமாறவும்; இவ்வாறு அவர்களுக்கு அளித்தால், குழந்தைகள் இஷ்டத்துடன் உண்டு, உடல் எடையும் கூடுவர்.

வாருங்கள், குழந்தைகளின் எடையை அதிகரிக்க கொடுக்க வேண்டிய உணவுகள் குறித்து இங்கு படித்தறிவோம்..! இது மற்ற அன்னைகளுக்கும் பயன்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் பதிப்பை பகிர முயற்சியுங்கள்..!

பால் பொருட்கள்

கொழுப்புச்சத்து நிறைந்துள்ள பால் பொருட்களான சீஸ் – அதாவது பாலாடைக்கட்டி வகைகள், வெண்ணெய், தயிர், பால், நெய் போன்றவை குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிப்பவை; இது போன்ற பால் பொருட்களை அடிக்கடி குழந்தையின் உணவில் சேர்த்து வந்தால், அவர்களின் உடல் எடை அதிகரிக்க நல்ல வாய்ப்புண்டு.

ஓட்ஸ்

குழந்தைகளுக்கான ஓட்ஸ் வகைகளை அவர்தம் உணவினில் சேருங்கள்; இது குழந்தைகளுக்கு தேவையான, போதுமான இரும்புச்சத்து, கலோரிகள் போன்றவற்றை அளிக்கும்.

முழு தானியங்கள்

முழு தானிய உணவான கோதுமை, குழந்தைகளுக்கு அதிக கலோரிகளை அளிக்கிறது; எனவே கோதுமையில் செய்த உணவு வகைகளையும், பிற முழு தானிய உணவுகளையும் குழந்தையின் உணவில் சேர்த்து, அவர்தம் உடல் எடையை அதிகரிக்க செய்யலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகப்படியான மற்றும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளை குழந்தைகளுக்கு வழங்குகிறது; இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், உடல் எடையை அதிகரித்தல், அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சி போன்ற நன்மைகளை அள்ளித் தருகிறது. குழந்தைகளுக்கு முக்கியமாக, அவகேடா, பேரிக்காய், பீன்ஸ், வாழைப்பழம் போன்றவற்றை அளிக்கலாம்.

ஆலிவ் எண்ணெய்

ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய காய்கறி எண்ணெய் அதாவது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்து கொடுத்தால், கலோரிகள் அதிகரித்து குழந்தைகளின் எடையும் கணிசமாக உயரும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் கலோரிகள் நிறைந்த ஒரு உணவாகும்; தினமும் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து வந்தால், அவர்களின் எடையும் நன்கு அதிகரிக்க துவங்கும்.

நொறுக்குதீனிகள்..!

குழந்தைகளுக்கு அடிக்கடி நொறுக்குத்தீனிகள் அளித்தால், அவர்கள் சரிவர உணவு உண்ணாமல், பால் குடிக்காமல் தட்டிக்கழிக்க தொடங்கிடுவர். எனவே, குழந்தைகளுக்கு சரியான கால இடைவெளியில் உணவினையும், நொறுக்குதீனிகளையும் அளியுங்கள்.