Home ஆரோக்கியம் பொது மருத்துவம் அம்மை நோய் வரப்போகுது! உஷாரா தடுப்பூசி போடுங்க!

அம்மை நோய் வரப்போகுது! உஷாரா தடுப்பூசி போடுங்க!

32

அம்மை நோய் வைரஸால் பரவுவது. அந்த வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்ணியவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவதால், இந்த வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. இந்தியா ஒரு வெப்ப நாடு என்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இந்த அம்மையில் சின்னம்மை, தட்டம்மை, பெரியம்மை என வகைகள் உண்டு.
இது வெயில் மற்றும் மழை கலந்த காலகட்டத்தில் பரவக் கூடியது. அப்போது தான் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. முதலில் காய்ச்சல், சளி என தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்களை உண்டாக்கும்.
அம்மை நோயின் அறிகுறிகள் மற்றும் தாக்கம் குறைய

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

சின்னம்மை என்றால் உடலில் கொப்புளங்கள் தோன்றும். அந்த கொப்புளங்கள் உடைந்து நீர் வடிந்து, அது வடுவாக மாறிவிடும். மேலும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.

குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்துவிட்டால் மறுபடியும் வர வாய்ப்பில்லை. ஏனென்றால் அதன் தடுப்பாற்றல் வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்கும்.

அம்மை நோய் தாக்குவதைத் தடுக்க தடுப்பூசியைக் குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து போட வேண்டும். பிறகு குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டும். இதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும்.

இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். தான்றிக்காய் தோலை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அம்மை நோயின் தாக்கம் குறையும்.

தவிர்க்க வேண்டியது

அம்மை நோய் வந்தால் வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மை நோயின் போது ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை. மேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இல்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இவற்றை முற்றிலும் தடுக்க வேண்டியது அவசியம்.

எனவே மறக்காம தடுப்பூசி போடுங்க! அம்மை நோயைத் தடுங்க !!