நாம் வேலை பார்க்கும் இடம், நம்முடைய உறவினர்கள், நம்மைச் சுற்றியிருப்பவர்கள் என எல்லா இடங்களிலுமே நேர்மறையானவர்களும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட பலரிடமிருநு்து விலகியிருப்பதே நமக்கு நாம் செய்து கொள்ளும் நல்ல விஷயமாக இருக்க முடியும்.
இந்த வகையில் கீழ்கண்ட எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது.
விமர்சகர்கள்
நம்மைப் பற்றி எப்போதும் விமர்சனங்களைக் குவித்துக் கொண்டிருப்பவர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. இல்லையென்றால் எப்பொழுதும் எதையாவது பேசி, அவர்களிடம் உள்ள எதிர்மறை எண்ணங்களை நம்மிடம் புகுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
முகமூடி மனிதர்கள்
நம்மிடம் வெளியில் பேசும்போது ஒரு மாதிரியும் நம்மைப் பற்றி வெளியில் ஒரு மாதிரியாக கருத்துக்களைத் திணிப்பவர்களிடம் இருந்து கட்டாயம் ஒதுங்கியிருக்க வேண்டும். மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்துபவர்களை நம்பலாம். ஆனால் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் வேறொன்றைப் பேசுபவர்களை நம்பவே கூடாது.
அதிகம் அறிவுரை கூறுபவர்
ஓரளவுககு மேல் எப்போது பார்த்தாலும் அறிவுரை என்ற பெயரில் அவரும் குழம்பி, நம்மையும் போட்டு குழப்பிக் கொண்டே இருக்கும் ஆட்களை எப்போதும் கொஞ்சம் தள்ளியே வைக்க வேண்டும். இதுபோன்ற ஆட்களை நம்முடைய அருகில் வைத்துக் கொண்டால் அது நாம் செய்யும் வேலைகளை பாதிக்கும்.
குற்றவாளிகள்
எதற்கெடுத்தாலும் தப்பு செய்துவிட்டு நம்முன் வந்து நிற்பவர்களை தூர விலக்கி வைக்க வேண்டும். அவர்களால் நமக்கு எப்போதுமே பிரச்னை தான்.
பொய் சொல்பவர்கள்
குழந்தைகள் சிறுசிறு பொய்கள் சொல்வதை நம்மால் ரசிக்க முடியும். ஆனால் வளர்ந்த நாம் பொய்வது பல சமயங்களில் கங்கடத்தையும் பிரச்னையையும் உண்டாக்கிவிடும். அதனால் தப்பித்துக் கொள்வதற்காக பொய் சொல்லும் ஆட்களை விட்ட விலகியிருப்பது நல்லது.
புறம் பேசுபவர்கள்
புறம் பேசுபவர்களை விட்டு கொஞ்சம் தள்ளியே இருங்கள். மேற்கண்ட எல்லா மனிதர்களைக் காட்டிலும் இவர்கள் தான் டேன்ஞசர். இவர்களால் தான் நிறைய பிரச்னைகள் உருவாக்கப்படுகின்றன.