என் வயது 21. கணவருக்கு 28. திருமணத்தன்றே தலைவலி ஆரம்பித்து விட்டது.பத்து வருடங்களாக சுய இன்பப் பழக்கம் இருந்ததால் என் கணவரால் முதலிரவன்றே உறவில் ஈடுபட முடியவில்லை. இன உறுப்பில் வலி இருக்கிறது என்கிறார்.எனக்கோ செக்ஸ் ஆசை அதிகமாக இருக்கிறது. நான் அவரை விவாகரத்து செய்து விடலாமா? அல்லது அவரைக் குணப்படுத்த முடியுமா?
கல்யாணச் சடங்குகளாலும், அதனால்ஏற்படுகிற களைப்பாலும் பெரும்பாலான தம்பதியருக்கு முதலிரவுமுழுமையான இரவாக அமைவதில்லை. கல்யாணத்தன்றே உடல் சங்கமம் நடந்தாக வேண்டும்என்றில்லை. உடலும், உள்ளமும் சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகு உறவில்ஈடுபடலாம். உங்கள் விஷயத்திலும் அப்படி நிகழ்ந்திருக்கலாம். கணவரின் சுயஇன்பப் பழக்கத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.மனம்தான் காரணம். தன் மனைவியை திருப்திப்படுத்த முடியுமா, ஆண்மையைநிரூபிக்க முடியுமா என்கிற பயத்தால்கூட உங்கள் கணவர் உறவைத் தவிர்க்கலாம்.அவருக்குத்தைரியம் சொல்லுங்கள். செக்ஸ் மருத்துவர் அல்லது மனநலமருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சலிங் செய்யலாம். அவராலும் ஆரோக்கியமானசெக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட முடியும் என நம்பிக்கை அளியுங்கள். உறுப்புகளில்வலி இருப்பதாகச் சொல்வதற்கும் மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெற்றுதீர்வு காணலாம்.
என்வயது 14. வயதுக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது. மார்பகங்கள்பெருத்துத் தொங்கிக் காணப்படுகின்றன. என்ன தீர்வு?
உடற்பயிற்சி ஒன்றுதான்ஒரே தீர்வு. மார்பகங்களில் உள்ளவை வெறும் கொழுப்புத் திசுக்கள். மார்பகக்கீழ் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்தால் ஓரளவு சரியாகும். சரியான அளவுள்ள, பட்டைவைத்த பிரா அணிவதும் அவசியம். அளவைக் குறைக்கிற சிகிச்சைகள்அறிவுறுத்தத் தக்கவையல்ல.
என் வயது 18. பூப்பெய்தி நான்கு வருடங்கள்ஆகிறது. என்மார்பகங்களில் காம்புகள் உள்ளே இழுத்த படி உள்ளன. நாளுக்கு நாள் மார்பகங்கள் சிறுத்துக் கொண்டேபோகிறது. தீர்வு சொல்வீர்களா? -சுகன்யா, கோவை.
இது இன்வர்ட்டட்நிப்பிள்ஸ் எனச்சொல்லக் கூடிய பிரச்சினையாக இருக்கலாம். அப்படியிருப்பின்நீங்கள் கல்யாணமாகி, கர்ப்பம்தரிக்கும்போது மார்பகங்கள் பெரிதாகிற சமயத்தில் இந்தப்பிரச்சினை தானாகச் சரியாகும். மற்றபடி மார்பகங்களில் ஏதேனும் வீக்கம்இருக்கின்றனவா எனப் பாருங்கள். கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா எனத்தெரியவேண்டும். நல்ல மகப்பேறு மருத்து வரை நேரில் கலந்தாலோசியுங்கள். வலிஇருந்தாலும் உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம். பிரசவத்துக்குப்பிறகு, குழந்தைதாய்ப்பால் குடிக்கிறபோது சரியாகும். கவலை வேண்டாம்.
என் வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. பிறந்தது முதல் நான் ஒருகிட்னியுடன்தான் வாழ்கிறேன். அதனால் மாதவிலக்குப் பிரச்சினைகள், கை, கால் வீக்கம், வெள்ளைப்படுதல் போன்றவைஏற்படுகின்றன. ஒரு கிட்னியுடன்உள்ள நான் கல்யாணம் பண்ணலாமா? உடலுறவிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்குமா? பிறக்கப்போகும் குழந்தையும் ஒருகிட்னியுடன் பிறக்க வாய்ப்புண்டா?
நீங்கள் திருமணம்செய்து கொள்ளக் கூடாது என்றில்லை. உங்களை ஏற்றுக் கொள்ளும் நல்ல கணவர்கிடைத்தால் தாராளமாகச் செய்து கொள்ளலாம். ஒரு கிட்னியுடன் இருந்தாலும், ஆரோக்கியமாகஇருக்கிறீர்களா என்பது தான் முக்கியம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும்மற்ற பிரச்சினைகளுக்கு சரியான சிகிச்சைகளின் மூலம் தீர்வுகாணலாம். ஒரு கிட்னியுடன் இருப்பதால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையிலோ, கர்ப்பம்தரிப்பதிலோ பாதிப்பிருக்காது. ஆனால் உங்களுக்குப் பிறக்கும்குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க ஐம்பது சதவிகிதம் வாய்ப்புகள்உண்டு.