Home சூடான செய்திகள் பெண்களின் உடல் கவர்ச்சி

பெண்களின் உடல் கவர்ச்சி

37

உடல் கவர்ச்சிக்கும், காதலுக்கும், காமத்திற்கும் தொடர்புண்டா எனக்கேட்டால், உண்டு என்பதே பதில்.

ஆம், நம்மில் பலருக்கும் இயற்கையை ரசிக்க மிகவும் பிடிக்கும். இயற்கை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்கிற மதிப்பீடும் நமக்கு உள்ளது. பச்சை பசேல் என தாவரங்கள் போர்த்திய மலை, கருமேகங்கள் சூழ்ந்த ஒரு பகுதி, நீலக்கடல், கண்ணாடி போல தெளிவான நீரோட்டங்கள். இன்னும் நிறைய. இவற்றை எல்லாம் பார்த்த மாத்திரத்தில் நமக்குப் பிடித்துப்போகும்.

இதையே இப்படி யோசிப்போம். காய்ந்த சருகு மரங்கள் உள்ள மலை, இருபுறமும் வெறும் மணல் பரப்பு மட்டும் உள்ள சாலை, கழிவுகள் நிறைந்து கருமை நிறமாய்க் காட்சி அளிக்கும் நீரோடைகள்.

உங்களுக்கு இவற்றை ரசிக்கப் பிடிக்குமா? 99.99% பேர் இல்லை என்று தான் பதில் சொல்வர்.

தாம்பத்திய வாழ்கையிலும், இப்படி ஒரு நிலையை சிந்தித்துப் பாருங்கள்.

எண்ணெய் வழியும் முகம், சரியாக வாராத தலை முடி, சற்றும் பொருத்தம் இல்லாத ஆடைகள் அணிதல், பெருத்த வயிறு, உடல் பாகங்களைப் பிரித்தறிய முடியாவண்ணம் கொழுத்து உருண்ட தேகம்.

இயற்கையை ரசிக்கவே நாம் சில மதிப்பீடுகள் வைத்திருக்கும்போது, இணைந்து வாழப்போகும், வாழ்ந்து கொண்டிருக்கும் துணையிடம் இப்படிப்பட்ட விஷயங்கள் இருந்தால், நம்மால் அவர்களை ரசிக்க முடியுமா? நிச்சயம் இல்லை. விதியே என மனதை தேத்திக்கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள் தான் அதிகம்.

கணவன் மனைவியின் ஒரு சிறு உரையாடல் பகுதி உங்களுக்காக.

மனைவி:
என்னங்க, நீங்க முன்ன மாதிரியெல்லாம் இப்போ என்ன கண்டுக்றதே இல்ல. சைட் அடிக்கிறது இல்ல, என்ன வருணிக்கிறது இல்ல. கல்யாணத்துக்கு முன்னாலயும், கல்யாணம் ஆன புதுசுலயும் நீங்க என்ன எப்டி எல்லாம் கொஞ்சுவீங்க? இப்போ அப்டியெல்லாம் நீங்க பண்றதே இல்லை.

கணவன்:
கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த மாதிரியாடி நீ இருக்க இப்போ? கொழுதுப்போயி பீப்பா மாதிரி இருக்க. உன்ன பாத்தா எவனுக்காவது, லவ் பண்ணனும்னு தோணுமா? அப்போல்லாம் எப்டி இருந்த தெரியுமா? மீடியமான உடம்பு, அழகா முகத்த கழுவி பவுடர் போட்டு, தலைக்கு ஏதாது பூ வெச்சு, உன்ன பார்க்கவே அவ்ளோ அற்புதமா இருக்கும். இப்போ அப்டியா? போயி வேலைய பாருடி.

இந்த உரையாடலை நாம் எங்கேனும் கேட்டிருக்கக்கூடும்.சும்மா சிரித்துவிட்டுச் சென்றிருப்போம். ஆனால் அதனுள் ஆழமாக சென்று பார்க்கையில், ஏதோ ஒரு உண்மை ஒளிந்திருப்பது உங்களுக்கு நிச்சயம் புரியும்.

இவை எல்லாம் காதலை சிறப்பானதாக மாற்ற முட்டுக்கட்டைகளா என நீங்க கேட்டால், நிச்சயம் ஆம் என்று தான் பதில் சொல்வேன்.

காதலுக்கு நிச்சயம் அழகு தேவை. ஆனால் அழகானவர்கள் மட்டுமே காதலிக்க வேண்டும் என்பது அதன் பொருள் இல்லை. நம் தோற்றத்தை பிறர் விரும்பும் வகையில் எப்படி காண்பிக்கிறோம் என்பதில் தான் விஷயம் அடங்கி இருக்கிறது.

ஆசை 60 நாளும் மோகம் 30 நாளும் தீர்ந்த பிறகு, மேலே சொன்ன வண்ணம் நம் உடலை, தோற்றத்தை நாம் பேணிக்காப்பதில்லை.

“அதான் கல்யாணம் ஆய்டுச்சே இனி எப்டி இருந்தா என்ன?” என்கிற கூற்றை நாம் வெகு இடங்களில் கேட்டிருப்போம். அவை எல்லாம் தாம்பத்தியத்திலும் காதலிலும் நமக்குள்ள ஈடுபாடு குறைவதையே காண்பிக்கிறது. அதனால் சீக்கிரம் விழித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் துணையை தினம் தினம் அழகு படுத்தி, ஆசை தீர ரசித்து, காதலித்து, காதல் மொழிகள் பேசி, காமம் உய்த்து இன்புறுவதில் தான் வாழ்க்கை உள்ளது.

ஆகவே உங்கள் தோற்றத்தில் கவனம் செலுதிப்பாருங்கள். திருமணத்திற்கு முன்பு எப்படியெல்லாம் உங்களை அழகு படுத்தி உங்கள் துணைக்கு காண்பிக்க விரும்பினீர்களோ, அதை இப்போதும் செய்து பார்க்க முற்படுங்கள்..

நிச்சயம் உங்கள் துணையின் கவனம் உங்கள் மீது திரும்பும். புதிய காதல் உதயமாகும், பிறகென்ன நடக்கும் என்று நான் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஹா ஹா