ஆண்மைக்குறைவு என்பது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவலாக உள்ள பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு என்னதான் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், நம்முடைய உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வது அவசியம். அதிலும் குறிப்பாக, உணவுப்பழக்கங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வால்நட்டை ஆண்கள் தங்களுடைய டயட்டில் தினமும் சேர்த்துக் கொள்வதால், ஆண்மையை அதிகரிக்கச் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது.
ஆண்மைக்குறைவு என்பது இல்லற வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தும். அது வெறும் உடல் சுகம் பற்றிய பிரச்னையாக மட்டுமல்லாது, எதிர்காலச் சந்ததிகளை உருவாக்குவதிலும் சிக்கலை ஏற்படுத்துவதால், இதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
2012 ஆம் ஆண்ட மேற்கொண்ட ஆய்வின் முடிவில், தினமும் தங்களுடைய உணவில் 75 கிராம் வரை வால்நட்டை எடுத்துக் கொண்ட 21 வயது முதல் 35 வயதுள்ள இளைஞர்களின் ஆண்மைத்தன்மை அதிகரித்தது தெரிய வந்தது. இந்த வால்நட்டைத் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்ததால் அவர்களின் விந்தணுக்கள் உறுதியடைந்திருந்ததையும் அந்த ஆய்வு உறுதி செய்தது.
உலகம் முழுவதிலும் 70 மில்லியன் பேர் ஆண்மைக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ள அதிர்ச்சித் தகவல்.
வால்நட்டில் உள்ள ஆல்பா – லியோலெனிக் என்னும் அமிலம் குறிப்பாக, விந்தணுக்களைப் பலப்படுத்தவும் ஆண்மையை விருத்தியடையவும் செய்கிறது