Home பெண்கள் தாய்மை நலம் பிரசவ கால விடுப்பு எப்ப எடுத்தா நல்லது?

பிரசவ கால விடுப்பு எப்ப எடுத்தா நல்லது?

25

வேலைக்கு செல்லும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அவர்களுக்கு அலுவலகங்களில் பிரசவ கால விடுப்பு (Maternity Leave) என்ற ஒன்று இருக்கும். அத்தகைய விடுப்பை எப்போது எடுக்க வேண்டும் என்ற கவலை பெரிதும் இருக்கும. ஏனெனில் அவர்களுக்கு அந்த விடுப்புகளை எந்த நேரங்களில் எடுத்தால் நல்லதுஇ சரியாக இருக்கும் என்பது தெரியாது. அதிலும் ஒவ்வொருவருக்கும் உடல்நிலை ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிறிது களைப்புடன் இருந்தாலே விடுமுறை எடுத்துவிடலாம் என்று தோன்றும்.

ஆனால் அவ்வாறு அவசரப்பட்டு பிரசவத்திற்கு முன்னரே விடுப்பு எடுத்துவிட்டால், பின் குழந்தை பிறந்த பின்னர் அவர்களை சரியாக கவனிக்க முடியாமல் போய்விடும். அதிலும் தனிக்குடும்பமாக இருந்தால், பெரும் அவஸ்தையாகிவிடும். அதுவே கூட்டுக் குடும்பம் இருந்தால், எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஏனெனில் வீட்டில் உள்ளோரே குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். ஆகவே அத்தகைய பெரும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, விடுப்புகளை எப்போது எடுத்தால், அந்த விடுமுறை சரியாக இருக்கும் என்பதை கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் சில டிப்ஸ்களை கூறுகின்றனர்.

எப்போது பிரசவ கால விடுப்பு (ML) எடுத்தால் நல்லது?

* சில பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய பிரச்சனைகள் இருப்பவர்கள், கண்டிப்பாக அநந்த நேரத்தில் பிரசவ கால விடுப்புகளை எடுத்தாக வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுத்துவிட்டால் தான், உடல் நிலையை சரியாக கவனிக்க முடியும். ஏனெனில் குழந்தையை விடவா வேலை முக்கியம். ஆகவே இந்த நேரம் மிகவும் முக்கியமானது. எனவே இந்த நேரத்தில் பிரசவ கால விடுப்பு அவசியமானது.

* கர்ப்பமாக இருக்கும் நேரம் முதல் மூன்று மாதத்தில் வேண்டுமானாலும் பிரசவ கால விடுப்புகளை எடுக்கலாம். அதிலும் ஒரு மாத விடுப்பு இந்த நேரத்தில் போதுமானது. ஏனெனில் இந்த நேரம் அதிக வேலைப் பளு மற்றும் அதன் காரணமாக மனதில் அழுத்தம் ஏற்பட்டாலும், கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். ஆகவே இப்போது பாதியையும், மீது விடுப்பை பிரசவத்தின் போதும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் குழந்தையுடனும் சந்தோஷமாக நேரம் செலவழித்தது போல் இருக்கும்.

* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இதுவரை இல்லை என்று இருப்பவர்கள், பிரசவம் ஏற்படும் இரண்டு நாட்களுக்கு முன் இருந்து விடுப்பு எடுத்தால் போதுமானது. எந்த பிரச்சனையும் இல்லாமல் விடுப்பு எடுத்து எதற்காக நாட்களை வீணடிக்க வேண்டும். பிரசவத்தின் போது எடுத்தால், குழந்தையுடன் வேலைக்கு போக வேண்டுமே என்று எந்த ஒரு பதட்டமும் இல்லாமல், அழகாக நாட்களை குழந்தையுடன் செலவழிக்கலாமே!

* பிரசவத்திற்கு பின் குறைந்தது ஒரு மாதமாவது வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டும். அதிலும் சிசேரியன் என்றால் குறைந்தது இரண்டு மாதமாவது வீட்டில் இருந்து, ரெஸ்ட் எடுக்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் தையல்கள் அனைத்தும் காய்ந்து, அதனால் ஏற்பட்ட புண்ணும் சரியாகும். ஆகுவே இந்த நேரத்தில் எடுப்பது தான் எப்போதும் சரியானது. ஒரு வேளை விடுப்பு இல்லையென்றாலும், பணம் போனாலும் பரவாயில்லை என்று விடுப்பு போட்டுவிடுங்கள். உயிரை விட வேலை ஒன்றும் முக்கியமில்லை.

ஆகவே மகப்பேறு விடுப்பு எடுக்க நினைப்பவர்கள், மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து, விடுப்பு எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும். இதனால் உங்கள் உடல் நலம் ஆரோக்கியமடைவதோடு, குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்கலாம்.