தெளிந்த குளத்தில் அவ்வப்போது கல்லெறிவது சிலருக்கு பிடித்த விளையாட்டு. அந்த விஷயத்தில் வேலு பிரபாகரன் இருக்கிறாரே… அவர் எறிந்த கற்களால் கோடம்பாக்கத்து தெப்பக்குளமே ரொம்பிக் கிடக்கிறது. ‘டாப்லெஸ் தப்பேயில்லை. எல்லாரும் அப்படியே திரிய வேண்டும்’ என்கிற தத்துப்பித்து தத்துவத்தோடு அவர் எடுத்த படம்தான் ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’. படத்தில் நடித்த ஹீரோயின் சில காட்சிகளில் டாப்லெஸ்சாக தோன்றி மனசை பதைபதைக்க வைத்ததும், பின்பு இன்டஸ்ட்ரியை விட்டே தலைமறைவானதும் நாடே அறிந்த அச்ச்சச்சோ…
அப்படம் செம துட்டு பார்த்தாலும், வேலுவுக்கு சில்லி காசு பெயரவில்லை. டாப்லெஸ்சுக்கு கோடி குவியுதுன்னா, ஃபுல் லெஸ்சுக்கு எப்படி குவியும்? புத்திக்குள் மின்னல் அடிக்க மறுபடியும் கேமிராவை தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டார். இது ரகசிய படப்பிடிப்பு என்கிறார்கள். (பின்ன வெளிச்சத்துலயா எடுக்க முடியும்?)
இந்த படத்திற்கு தலைப்பு ‘காதல் கனவு கொலை’. சென்சாரை சமாளிக்க சில சட்ட நுணுக்களையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறாராம் இப்பவே! முள்ளுக்கு பயந்தா பலாப்பழத்தை பறிக்க முடியுமா?