தம்பதியர் இருவரும் தனியாய் சந்திக்கும் இடம் படுக்கையறைதான். அங்கு பெண்கள் செய்யும் ஒரு சில தவறுகள் ஆண்களின் மனதை அப்செட் செய்து விடும். எனவே தாம்பத்ய வாழ்க்கையில் தடங்கள் ஏற்படாமல் இருக்க பெண்கள் தவிர்க்கவேண்டிய சில விசயங்கள் உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர் அவற்றை பின்பற்றுங்கள்.
வெட்கத்தை தள்ளி வைப்போம்
அச்சம், மடம், நாணம், வெட்கம் பெண்களுக்கு இருக்க வேண்டியதுதான். ஆனால் படுக்கையறையில் அது செல்லுபடியாகாது. அதிகமாக இருந்தால் உங்கள் ஹஸ்பெண்ட் உங்களை சஸ்பெண்ட் செய்துடுவார். எனவே படுக்கையறையில் தேவையற்ற கூச்சம், வெட்கத்தை தள்ளி வைத்து, கணவருக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
புதிதாய் பூத்த பூ
படுக்கையறையில் எதையாவது நினைத்து கன்னத்தில் கைவைத்துக் கொண்டு உட்காந்திருக்க கூடாது. இந்த தோற்றத்தை கண்டாலே கணவருக்கு இருந்த மூடெல்லாம் போய் விடும். எனவே படுக்கையறைக்கு செல்லும் போது அப்போது பறித்த ரோஜா மலர் போல சிரித்த முகத்துடன் இருங்கள்.
அதிகாரம் வேண்டாமே
நிர்வாகத்தில் ராஜகுமாரியாக இருங்கள். ஆனால், படுக்கையறையில் ராஜகுமாரி தோரணையில் கணவரை மிரட்டாதீர்கள். இது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே கணவரின் செயல்களுக்கு மறுப்பு தெரிவிக்காதீர்கள்.
விமர்சனம் கூடாது
படுக்கையறையில் எந்த சந்தர்ப்பத்திலும் கணவரை விமர்சனம் செய்யக் கூடாது. அது அவர்களின் தன்மான உணர்வை தூண்டிவிடுமாம். இதனால் இருவருக்குமிடையே விரிசல்தான் எற்படும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
சிலிர்க்க வைக்கும் உடைகள்
படுக்கையறைக்கு வரும்போது அதற்கேற்ப நைட்டி, உடை அணிந்து கொள்கின்றனர். இது ஆண்களுக்கு பிடிக்காதாம். எனவே சிலிர்பூட்டக்கூடிய உடைகளை அணிவதைத்தான் ஆண்கள் விரும்புகின்றனராம்.
இரு கை சேர்ந்தால் தான் ஓசை வரும். அது போல இருவரின் ஆசையும் இணைந்தால்தான் இல்லறம் இனிக்கும். எனவே உளவியல் நிபுணர்கள் கூறும் சூத்திரங்களை பின்பற்றினால் தம்பதிகள் இருவரும் அன்பெனும் ஊஞ்சலில் நாளெல்லாம் சந்தோஷ சங்கீதம் பாடலாம்