இந்த தலைமுறை இளைஞர்களிடம் வயது வித்தியாசம் இன்றி காதல் பூத்து குலுங்குகிறது. ஆனால் சமீப காலத்திற்கு முன்பு வரையிலும் திருமணம் செய்யும் போது குறைந்தபட்சம் ஆறு வயது வித்தியாசம் உள்ள பெண்ணை பார்த்து திருமணம் செய்வதற்கு ஒத்துக் கொள்வார்கள்.
இந்த பழக்க வழக்கங்கள் இன்றைய காலத்தில் தலைக் கீழாக மாறி இருக்கிறது.
ஏனெனில் கலாச்சார கலப்பு, இருவரும் வேலைக்கு செல்லும் முறை, வயது வித்தியாசம் பாராத பழக்கவழக்கங்கள் இது போன்ற நமது வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஆண்கள் வயது மூத்த பெண்களையும், பெண்கள் வயது குறைந்த ஆண்களையும் விரும்பி, திருமணம் செய்துக் கொள்ள காரணமாக இருக்கிறது.
ஆண்களுக்கு தன்னைவிட மூத்த பெண்கள் மீது அதிக அளவில் மோகம் ஏற்படுவதற்கான காரணங்கள் தான் என்ன?
பெண்களின் அழகு என்பது அவர்களின் பதின் வயதுகளில் இருந்து இருபதுகளின் ஆரம்பத்தின் வரை இருக்கும். எனவே ஆண்களுக்கு அவர்களை விட வயது மூத்த பெண்கள் மீது ஆசை அல்லது மோகம் ஏற்பட அழகு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
ஆண்கள் நச்சரிப்புகள் இல்லாத தன்மை, தெளிவான பேச்சுக்கள், அனைத்தையும் மிக எளிதில் புரிந்துக்கொள்ளும் மனோபாவம் ஆகியவை வயது அதிகமான பெண்களிடம் இருக்கிறது என்று கருதி சில ஆண்கள் அவர்கள் மீது மோகமாக இருப்பார்கள்.
பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இதிலும், முதிர்ச்சியான பெண்ணிடம் புரிதலோடு கலந்த அக்கறை இருப்பது, தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், புத்துணர்ச்சி அடையவும் செய்கிறது என்று ஆண்கள் கருதுகிறார்கள்.
வீடு மற்றும் நாடு ஆகிய இரண்டு இடத்திலும் ஆண்கள் தான் தலைமை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த தலைமுறை ஆண்களிடம் இல்லை. எனவே திருமணம் செய்யும் பெண் ஒரு முதிர்ச்சியான பெண்ணாக இருந்தால், அவர்கள் வீட்டை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணம் ஆண்கள் மத்தியில் இருக்கிறது.
ஆண்கள் தாங்கள் செய்யும் சிறுசிறு தவறுகளையும் வயதில் மூத்த பெண்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருப்பார்கள். மேலும் அவர்கள் ஈகோ எனும் அகம்பாவத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். இதனால் கூட ஆண்கள் தன்னை விட வயது அதிகம் உள்ள பெண் மீது ஆசை கொள்ள காரணமாக உள்ளது.
வாழ்க்கையின் அனுபவங்கள், ஒரு செயலில் எதிர்கொள்ள வேண்டிய சூழல்கள், முக்கிய நிகழ்வுகள் இது குறித்த அனுபவ ஆற்றல் அவர்களிடம் இருப்பதால், தன்னை விட வயது மூத்த பெண்கள் மீது சில ஆண்கள் மோகம் கொள்கிறார்கள்.