Home இரகசியகேள்வி-பதில் இதில் பிரச்சினைகள் எதுவும் வருமா? மற்றொரு கேள்வி. உறவில் முன்னிருந்த ஈடுபாடு இப்போது இல்லை.

இதில் பிரச்சினைகள் எதுவும் வருமா? மற்றொரு கேள்வி. உறவில் முன்னிருந்த ஈடுபாடு இப்போது இல்லை.

57

கேள்வி: எனக்கு வயது 22. என் கணவருக்கு வயது 27. திருமணமாகி ஒரு வருடமாகியும் குழந்தை இல்லை. நாம் உறவில் இணையும்போது என் கணவர் முன்விளையாட்டுக்களைத் தவிர்த்துவிட்டு உடனே இணைகிறார்.

அவர் உச்சம் தொட்டதும், என் தேவைகள் பற்றி சிந்திக்காமல் உடனே விட்டு விலகிவிடுகிறார். அவரைத் திருப்திப்படுத்தவே விருப்ப மில்லாமலேயே அவருடைய ஆசைக்கு இணங்குகிறேன். முன் பெல்லாம் இப்படியில்லை. இப்போது இப்படி நடந்துகொள் வதற்குக் காரணம் நான் இன்னும் கருவுறாமையா? என் மேல் அவருக்கிருந்த ஆசை குறைந்துவிட்டதா?

பதில்: வருத்தமான விடயம்தான்! ஒரு பெண்ணின் விருப்பத்தை அறியாமலேயே அதுவும் முன்விளை யாட்டுக்களைத் தவிர்த்து உறவில் ஈடுபடுவது, உடல் ரீதி யாகவும் உள ரீதியாகவும் அந்தப் பெண்ணுக்கு எந்தளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

திருமணமானது முதலே உஙகள் கணவர் இவ்வாறு நடந்துகொண்டிருந்தால் அதை வேறு விதமாகப் பார்க்கலாம்.

ஆனால், ஒரு வருடத்தின் பின் இப்படி நடந்துகொள்வதுதான் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை நீங்கள் குறிப்பிடுவது போலவே குழந்தைப் பேறு கிட்டாததே பிரச்சினையாகவும் இருக்கலாம்.

தாம்பத்தியம் தவிர உங்கள் இருவருக்குமான உறவு எப்படியிருக்கிறது என்று தெரியவில்லை.

ஒருவேளை உங்களுடன் நன்கு சிரித்துப் பேசியோ அல்லது உங்கள் மீது அக்கறை செலுத்துபவராகவோ இருந்தால், இந்தப் பிரச் சினையை மென்மையான முறையில் அவரிடமேயே கேட்டுப் பார்க்கலாம்.

ஒருவேளை தன்னைப் பாதித்திருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை உங்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக, அவரும்கூட விருப்பமில்லாமல் உங் களுக்காக உறவில் இணையவும் வாய்ப்புகள் உள்ளன.

பொதுவில், இதுபோன்ற பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரும் கதைத்துத் தெரிந்து கொள்வதே நல்லது. இல்லாவிட்டால் பல்வேறு சந்தேகங்கள் மனதுக்குள் குடிபுகுந்துவிடும்.

அப்படி நடந்துவிட்டால் அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்வது மிகச் சிரமமான காரியம்.

எனவே, உங்கள் கணவரிடமேயே இதுபற்றிக் கதை யுங்கள். நிச்சயம் பிரச்சினைகள் தீரும்.
———————————————–
கேள்வி: எனது வயது 19. எனக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால், நான் இப்போது வீட்டில் யாருடனும் சிரித்துக் கதைப்பதில்லை. யாரும் என்ன கேட் டாலும் எரிந்துவிழுகிறேன். மனதில் ஒரு அமைதி இல்லை.

உறவுக்கார இளைஞர் ஒருவரைத்தான் விரும்புகிறேன். இது வீட்டுக்கும் தெரியும். தற்போது அவரைக் கொஞ்ச நாட்கள் என்னுடன் பேசவேண்டாம் என்று கூறியிருக்கிறேன். இந்த நிலையில் எனது இந்தத் திடீர் மாற்றத்துக்குக் காரணம், நான் வேறு யாருடனோ காதலில் விழுந்திருப்பதே என்று வீட்டார் குற்றஞ்சுமத்துகின்றனர்.

சத்தியமாக நான் அவரைத் தவிர வேறு யாரையும் விரும்பவில்லை. நான் ஏன் இப்படி ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை. இது வயதுக் கோளாறா? அல்லது எனக்கு வேறு ஏதாவது பிரச்சினை இருக்குமா?

பதில்: இது வயதுக் கோளாறாக இருக்க வாய்ப் பில்லை. ஏனென்றால், இந்த வயதில் வரும் கோளாறுகள் வேறு மாதிரியானவை.

உங்களிடம் தோன்றியிருக்கும் மாற்றத்தை நீங்களே அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால், அந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன என்பதையும் நீங்களே தான் அறிந்திருக்கவேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம்.

உங்களுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்று உங்களைச் சுற்றி யுள்ள சூழலில் நடந்திருக்கிறது. அது என்ன என்பதை நீங்கள்தான் அடையாளம் காணவேண்டும்.

உங்கள் நண்பிகளுக்குள் ஏதேனும் பிரச்சினை, உயர்கல்வி பயில்பவராக இருந்தால் கல்வி நிறுவனத் திலோ அல்லது கற்றல் செயற்பாடுகளிலோ ஏதேனும் பிரச்சினைகள், உங்கள் எதிர்காலம் குறித்த ஏதேனும் அச்சம், காதலில் ஏதேனும் சந்தேகம் போன்ற எதுவாக வும் இருக்கலாம்.

அதுசரி…. உங்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை அடிப்படையாக வைத்து, நீங்கள் வேறொரு வரைக் காதலிப்பதாக உங்கள் குடும்பத்தார் சந்தேகப்படக் காரணம் என்ன? அப்படியானால், நண்பராகவோ, ஆசிரியராகவோ, அயல்வீட்டுக் காரராகவோ யாராவது ஒரு ஆண் உங்களுடன் அறிமுகமாகியிருக்கிறாரா?

உங்களிடம் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பது உங்களுக்கே தெரிகிறது. எனவே அது எது என்பதைக் கண்டறிந்து, இந்தப் பிரச்சி னைக்குத் தீர்வு காணவேண்டியது நீங்கள்தான்.

இந்த நிலையை மாற்ற விரும்பினால் தியானம், உடற்பயிற்சி, இசை என்று ஏதேனும் ஒன்றின் துணையை நாடுங்கள். உங்கள் மனச்சுமை குறையும்.
————————————————————————-

கேள்வி: நான் ஒரு பெண். எனக்கு வயது 23. காதல் திருமணம் முடித்து ஒரு வருடம். வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்தபின் பெற்றுக்கொள்ளலாம் என்று குழந்தைப் பேற்றைத் தள்ளிவைத்திருக்கிறோம்.

உறவின்போது சுக்கிலப்பாயம் வெளியேறும்போது விலகிவிடுவோம். இது சரிதானா?

இதில் பிரச்சினைகள் எதுவும் வருமா? மற்றொரு கேள்வி. உறவில் முன்னிருந்த ஈடுபாடு இப்போது இல்லை. முன்பு விரைவாகவே நான் உச்சநிலை தொட்டுவிடுவேன்.

இப்போது அப்படியில்லை. மேலும் விருப்பமில்லாத நிலையில் உறவுகொள்ளும்போது வலியெடுக்கிறது. ஈடுபாடு இல்லாததற்கு பெண்ணுறுப்பு விரிவடைந்ததுதான் காரணமா?

இதுபற்றிக் கணவரிடம் தெரிவிக்கவில்லை. அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

பதில்: நல்ல முடிவு எடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும் வயது இன்னும் இருப்பதால் நீங்கள் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுவதில் தவ றில்லை. குழந்தைப் பேற்றைத் தடுப்பதற்காக நீங்கள் கடைப்பிடிக்கும் முறை சரியானதுதான். ஆனால், உங்கள் பிரச்சினைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
மணமுடித்த புதிதில் தினந்தினம் புது அனுபவங்கள் உங்களை விரைவிலேயே உச்சநிலைக்கு இட்டுச் சென்று விடும். அதுவே பழகிவிடுவதால், அதற்கு மேலும் தேவைப் படுகிறது. நீங்கள் இயற்கையான முறையில் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுவதால் கணவரின் முழுமையான வேகத்தை உங்களால் உணர முடியாது போயிருக்கிறது. இந்த நிலையில் ஆணுறையைப் பயன்படுத்தினீர்கள் என்றால் உங்களது உறவு முழுமையடையும். நீங்களும் திருப்தியடையலாம்.
உடலுறவில் திருப்தியில்லாதவிடத்து ஆர்வம் குறைந்துவிடும். கடந்த ஒரு வருடத்தில், ஆறுமாத காலத்தின் பின்னரான உறவு உங்களுக்குத் திருப்தி ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதன் அடிப்படையில்தான் உங்களுக்கு உறவில் ஆர்வம் குறைந்திருக்கிறது. எனவே ஆணுறையைப் பயன்படுத்தி னால் இந்த இரண்டு பிரச்சினைகளும் தீரும்.
குழந்தைப் பேற்றுக்குப் பின்னரே, அதுவும் சுகப் பிரசவமாக, இயற்கையான முறையில் குழந்தை பிறந்தால் பெண்ணுறுப்பு தளர்ச்சியடையலாம். உங்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லாத நிலையில் உங்கள் பெண்ணுறுப்பு விரிவடைந்திருக்க வாய்ப்பில்லை.
உறவில் ஆர்வமோ, விருப்பமோ இன்றி ஈடுபட்டால் நிச்சயமாக அது வலிதரும் அனுபவமாகவே அமையும். இந்த நிலையில், உங்கள் கணவரிடம் இதுபற்றிக் கலந்து பேசி, அவரை ஆணுறை அணியச் செய்வதன்மூலம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.