சரும நிபுணர்களில் பெரும்பாலானோர் அறிவுறுத்தும் முக்கியமான விஷயம், பெண்கள் தங்களுடைய அந்தரங்க உறுப்புகளில் வளர்ந்திருக்கும் முடியை ஷேவ் செய்யக்கூடாது என்பது தான்.
அவ்வாறு வளர்ந்திருக்கும் முடியால் ஆரோக்கிய குறைபாடு உண்டாகும் என்றும், அல்லது கரடுமுரடாக வளர்ந்து அசிங்கமாக இருக்கிறது என்றும் நினைத்துப் பெரும்பாலான பெண்கள் ஷேவ் செய்துவிடுகிறார்கள்.
ஷேவ் செய்து வழவழவென இருக்கும் பகுதியையே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த பகுதிகளில் உள்ள முடியை ஷேவ் செய்தால் தான் அதிக அளவில் ஆரோக்கிய குறைபாடு உண்டாவதாக சரும் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நம்முடைய தலைமுடியைப் போல, அந்தரங்கப் பகுதிகளில் முடி நீளமாக வளர்வதில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்தவுடன் அதன் வளர்ச்சி வேகம் இயல்பாகவே குறைந்துவிடும்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் முடிகள் உதிர ஆரம்பித்து, மீண்டும் புதியதாகவே முளைக்கும்.
இதன் வளர்ச்சி மனிதருக்கு மனிதர் வேறுபடும். பெரும்பாலும் அந்த பகுதிகளில் வளரும் முடியின் நீளம் 0.5 இன்ச் முதல் 2 இன்ச் வரை மட்டுமே வளரும் தன்மை கொண்டது.
சிலர் அந்தரங்கப் பகுதி சுத்தமாக இருக்கவே முடியை ஷேவ் செய்வதாகக் கருதுகிறார்கள். ஆனால் அப்படி செய்வதாலேயே அந்த பகுதி சுத்தமாகிவிடுவது கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளே வியர்வை தங்கும் போதும் சுத்தமில்லாமல் போகும். அதனால் அவ்வப்போது அந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டுமேயொழிய, முடியை ஷேவ் செய்யத் தேவையில்லை.
உங்களுடைய தலைமுடியும் உங்கள் அந்தரங்கப் பகுதியில் உள்ள முடியின் நிறமும் ஒன்றாகவே இருக்கும். அதில் கொஞ்சமும் மாற்றம் இருக்காது. ஆனால் புருவங்களில் உள்ள முடியும் அந்தரங்கப் பகுதியில் உள்ள முடியின் நிறமும் வேறுவேறாகத்தான் இருக்கும்.
அடர்ந்து வளர்ந்திருப்பது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால் ட்ரிம் செய்து கொள்ளலாமே தவிர, ஷேவ் செய்யக்கூடாது.
அவை அந்த பகுதியை பாதுகாக்கும் கவசம் போன்றது. அதன் மென்மைத்தன்மையை தக்க வைக்க உதவுகிறது. ஷேவ் செய்யச்செய்ய அந்த பகுதியில் உள்ள தோல் கடினத்தன்மை உடையதாக மாறிவிடும்.