அந்தரங்க பகுதியில் ஏன் முடி உள்ளது என்று தெரியுமா? அறிவியலின் படி, அந்தரங்க முடி எதிர்பாலினத்தவரை ஈர்ப்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது. மேலும் இந்த முடி, எதிர்பாலினத்தவரை கவர உடலால் உற்பத்தி செய்யப்படும் ஒன்று எனவும் அறிவியல் கூறுகிறது.
அந்தரங்க பகுதியில் இருக்கும் முடி, உராய்வு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இது பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாப்பை வழங்குவதாகவும் நம்பப்படுகிறது.
ஆய்வு ஒன்றில் அந்தரங்க முடி உடலுறவின் போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இடமாற்றப்படும். அதனால் தான் உடலுறவில் ஈடுபட்ட பின், சுத்தம் செய்யும் போது பலரும் அந்தரங்க முடியைப் பெறுகின்றனர்.
இது மிகவும் மோசமான ஒன்று. ஆனால் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில், அந்தரங்க முடியில் மலத்தில் உள்ள துகள்கள் சிக்கிக் கொள்ளுமாம். ஆகவே அந்தரங்க முடியை அவ்வப்போது ஷேவ் செய்து நீக்கிவிடுவதே சிறந்ததாம்.
அந்தரங்க முடியை ஒருவர் நீக்குவதால், உடலுறவினால் பாலியல் நோய்களின் தாக்குதலுக்கான அபாயம் அதிகம் உள்ளது என்பது தெரியுமா?
அதனால் அடிக்கடி அந்த இடங்களில் உள்ள முடிகளை நீக்குதல் கூடாது.
அந்தரங்க பகுதியில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால், பேன் வரும் வாய்ப்புள்ளது என்பது தெரியுமா? ஆம், எனவே குறைந்தது 4 மாதத்திற்கு ஒருமுறை அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கினால் போதும்.
ஆனால் இயற்கையான முறையில் நீக்க வேண்டும். ரேசர் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தாதீர்கள்.
அந்தரங்கப் பகுதி என்பது மிக மென்மையானது. அவற்றைப் பூப்போலத்தான் கையாள வேண்டும்.