Home காமசூத்ரா உடலுறவிற்காக உயிரையும் துச்சமாக மதிக்கும் ஆண்கள் !

உடலுறவிற்காக உயிரையும் துச்சமாக மதிக்கும் ஆண்கள் !

55

இனப்பெருக்க ரீதியில பார்த்தால் எதிர்பாலினத்தை கவர்வதற்க்காக செய்யும் சில வீரமான/ஆபத்து நிறைந்த செயல்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். பலனாக அவர்களுக்கு லாபமே அதிகம் நஷ்டமில்லை என்கிறது இதுவரையிலான ஆய்வுகள்! காரணம் எடுத்துக்கொண்ட அந்த செயலில் வெற்றிடைந்து.

விரும்பிய பெண்ணை அடைவதன்மூலம், குறைந்தபட்சம் அவன் சந்ததி தொடரும்/வளரும் வாய்ப்பையாவது உருவாக்கிவிடுகிறான் ஆண். அதன்பின் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரை, காரணம் அவன் சந்ததி உருவாகிவிட்டது!

ஒரு தந்தை இல்லாத குழந்தையின் கல்வியும், சமுதாயத்தில் வெற்றியும் கேள்விக்குறியாகலாம். ஆனால், ஒரு தாயில்லாக் குழந்தையின் நிலை பரிதாபத்துக்குரியது. அது தாயால் பிறந்த சில வருடங்கள் கழித்து தனித்து விடப்பட்டுவிட்ட குழந்தையானாலும்! இதற்க்கு, வளரும் நாடுகளின் ஆதரவற்றோர்/ஆனாதைக் குழந்தைக் காப்பகங்களின் எண்ணிக்கையே சரியான சான்று!

ஆக, பெண்கள் ஆண்களைப்போல, காதலுக்காக உடல் ரீதியிலான, ஆபத்தான வீர தீரச் செயலகளிலெல்லாம் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகிறார்கள் பரிணாம வளர்ச்சியின்படி என்று யூகிக்கிறார்.

இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆன்னீ கேம்பெல் ( Anne Campbell of Durham University in England)