இயற்கையாகவே இனிப்புத் தன்மை கொண்ட காய் கேரட். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரே காய் கேரட் தான்.
இதை சமைத்து தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. சமைத்து சாப்பிடுவதை விடவும் பச்சையாகச் சாப்பிடுவது அதிக சுவையாக இருக்கும்.
கேரட்டை தினமும் உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது.
ஆண்மை போன்ற பிரச்சனைகள் வாழ்நாளில் வரவே வராது.
கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட அதனை பச்சையாக சாப்பிடும் போது அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைக்கிறது. கேரட்டில் உள்ள சத்துக்கள் பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றுள்ளது.
விட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்களுக்கும், சருமத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
மேலும், வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் ஒன்றாக கலந்து சாப்பிட்டால் ஆண்மை பல மடங்கு அதிகரிக்கும் தன்மை கொண்டது.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினந்தோறும் கேரட் சாறைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குப் பிரச்சனைகளை கேரட்டும் முட்டையும் கட்டுப்படுத்துகின்றன.