Home ஆண்கள் மலட்டுத்தன்மைக்கு இதெல்லாம் தான் காரணமாம்… கொஞ்சம் கவனமாக இருங்க..

மலட்டுத்தன்மைக்கு இதெல்லாம் தான் காரணமாம்… கொஞ்சம் கவனமாக இருங்க..

34

திருமணம் முடிந்து சில காலங்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழித்துவிட்டு, பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள்.

இந்த மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. அவற்றில் பல நடவடிக்கைகள் நம்முடைய ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடுகின்றன. அதில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது இந்த மலட்டுத்தன்மை என்னும் பிரச்னை தான்.

குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடுவதும் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சில பழக்கங்களுமே இந்த பிரச்னைக்குக் காரணமாக அமைகின்றன.

நம்முடைய உடலில் தோன்றும் சில அறிகுறிகள் மலட்டுத்தன்மை நமக்கு சொல்லாமல் சொல்கின்றன. அதை சரியாகப் புரிந்து கொண்டு, செயல்படத் துவங்கினாலே மலட்டுத்தன்மையை சரிசெய்துவிட முடியும்.

சரியான பிஎம்ஐ அளவு இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது சிலர் தங்களுடைய உயரத்துக்கேற்ற எடையுடன் இருக்கிறீர்களா என்று அடிக்கடி சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

போதிய தூக்கமின்மை மலட்டுத் தன்மை மட்டுமல்லாமல் இன்னும் பல ஆரோக்கியக் குறைபாடுகளை உண்டாக்கும். சிலருக்கு உடல்பருமனும் கூட மலட்டுத்தன்மையை உண்டாக்கும். உங்களுடைய பிஎம்ஐ அளவு மிகக்குறைவாக இருந்தாலும் ஹார்மோன் உற்பத்தி பாதித்து மலட்டுத்தன்மை ஏற்படும்.

சரியான துக்கமின்மை காரணமாக மலட்டுத்தன்மை மட்டும் அல்லாமல் இன்னும் பல ஆரோக்கியக் கோளாறுகளை உண்டாக்கும். பெண்களுக்கு சரியாகத் தூக்கமில்லாமல் இருந்தால் அவர்களுடைய மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் உண்டாகும். அதுவே மலட்டுத்தன்மைக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

தினமும் அல்லது அடிக்கடி ஆல்கஹால் எடுத்துக் கொள்பவராக இருந்தாலும் மலட்டுத்தன்மை உண்டாகும் வாய்ப்பிருக்கிறது. மலட்டுத்தன்மை உள்ளவர்களில் 50 சதவீதத்துக்கும் மேல் ஆல்கஹால் அதிகம் உட்கொள்பவர்களாகவே இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள நீங்கள் அதிக சிரத்தையுடன் செய்யும் சில உடற்பயிற்சி கூட மலட்டுத்தன்மைக்குக் காரணமாக அமையுமாம்.